சர்ச்சைக்கு பெயர் போன 5 கிரிக்கெட் வீரர்கள்.. சகட்டுமேனிக்கு சண்டைபோட்டு சொந்த நாட்டை கேவலப்படுத்திய பிளின்ஃடாப்

கிரிக்கெட் பெரும்பாலும் ஒழுக்கங்களை போற்றும் விளையாட்டாக விளையாடப்படுகிறது. சில வீரர்கள் ரொம்ப ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்கள். அதுவே சில ஆக்ரோஷமான வீரர்களை உசுப்பேற்றி விட்டோம் என்றால் எல்லைமீறி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் மிருகத்தனமாக நடந்து கொள்வார்கள்.

செல்லும் இடமெல்லாம் பிரச்சனையை சுமந்து செல்லும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி பொது இடத்தில் சண்டையிட்டு தங்கள் பெயரையும் சொந்த நாட்டு பெயரையும் கப்பலில் ஏற்றிய 5 வீரர்களை பார்க்கலாம்.

அன்ரிவ் பிளின்ஃடாப்: கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போதே திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து விட்டார் பிளின்ஃடாப். அதன்பின் குத்துச்சண்டை, கார் ரேஸ் என வேறு ஒரு வாழ்க்கையை தேடி போய் விட்டார். இவர் இரவு முழுவதும் மது குடிப்பார். மதுபான விடுதியில் தான் இருப்பார். அங்கேயே பலபேர் மூக்கை உடைத்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவார். இப்படி பலமுறை சர்ச்சையைக் கிளப்பி மொத்த நாட்டையும் அசிங்கப் படுத்தி உள்ளார் .

பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணிக்கு இப்பொழுது கேப்டனாக செயல்படுகிறார். இவரும் மது பழக்கத்தினால் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார். சமீபத்தில் இவர் மது அருந்திவிட்டு பொதுவெளியில் போட்ட சண்டை இவருக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்தது .

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: இவர் மைதானத்திலேயே சக வீரர்களுடன் சண்டை போடுவார் என்றால் வெளியிடத்தில் இவரைப் பற்றி கேட்கவா வேண்டும். இவர் ஒரு முறை குடித்து விட்டு இன்னொரு காரின் மீது மோதி ஜெயில் வரை சென்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங்வுடனும் மோசமாக சண்டை போடுவாராம்.

இன்சமாம் உல் ஹக்: இவரும் மிகவும் ஒரு கோபக்கார மனிதராம். இவரை உருவ கேலி செய்தவர்களை எல்லாம் இவர் புரட்டி எடுத்து இருக்கிறார் என்பது சுவாரசியமான விஷயம். ஒருமுறை மைதானத்தின் பார்வையாளர்கள் இருக்கையில் பாய்ந்து, பாய்ந்து ஒரு ரசிகரை புரட்டி எடுத்து விட்டார்.

ஷாகிப் அல் ஹசன்: ஒரு கேப்டன் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு இவர்தான். ஒரு போட்டியில் நடுவரை அடிக்கப் பாய்ந்து அசிங்கப்பட்ட இவருக்கு ஐசிசி மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்தது. அதன்பின் மன்னிப்பு கேட்டு அணியில் ஒட்டிக்கொண்டார், இல்லை என்றால் இவர் மீது வழக்கு பதிந்து இருக்கும். இவரும் பொதுவெளியில் அராஜகமாக நடந்து கொள்ளும் மோசமான வீரர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்