கல்யாணமே தேவையில்லை.. 51 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்ள துடிக்கும் அஜித் பட நடிகை

எல்லோரையும் போல தனக்கு தாயாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவும், திருமணம் ஆனால் தான் ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்த நடிகை ஒருவர் பரபரப்பான ஸ்டேட்மென்ட் கொடுத்து இருக்கிறார்.

பொதுவாக நடிகைகளில் பலர் 30 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். சிலர் 40 நெருங்கியும் திருமணம் பற்றி யோசிக்காமல் சினிமா, பொழுதுபோக்கு என்று அவர்களது வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் சினிமாவில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Also Read : 40 வயதைக் கடந்தும் சிங்கிளாகவே சுற்றும் 6 நடிகைகள்.. மவுசு குறையாத ஆன்ட்டிகள்

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் மூலம் நேரடி அறிமுகமானவர் தான் நடிகை தபு. பாலிவூடில் 80 களிலேயே தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி விட்டார். 50 வயதை நெருங்கி விட்ட தபு இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

தற்போது ஒரு பேட்டியில் பேசிய தபு, தனக்கு எல்லோரையும் போல தாயாக ஆசை உள்ளது எனவும், ஆனால் அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், வாடகை தாயின் மூலம் தான் குழந்தை பெற்றுக்கொள்ள உரிமை உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Also Read : உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை

மேலும் பேசிய அவர், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமான ஒன்று இல்லை எனவும், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ முடியும் என்றும், கல்யாணம் ஆகவில்லை என்றால் செத்து விட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தபு ஏற்கனவே தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்ததால் தபுவை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறுகின்றனர். தபு மீது ஏற்கனவே நடிகர் சல்மான்கானுடன் இணைந்து மானை வேட்டையாடிய வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read : அஜித்துடன் நடித்துள்ள மச்சினிச்சி.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே

Next Story

- Advertisement -