உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்.. அனுஷ்காவை தூக்கி சாப்பிட்ட அரேபிய குதிரை

ஹீரோக்களை விடவும் சில ஹீரோயின்கள் உயரமாக உள்ளனர். அதனால் சில சமயங்களில் ஹீரோவை உயரமாக காட்டுவதற்காக இயக்குனர்கள் சில உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் ரசிகர்களும் உயரமாக உள்ள நடிகைகள் மீது கவரப்படுகிறார்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் உயரமான நடிகைகளை பார்க்கலாம்.

சதா : தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தவர் நடிகை சதா. இவர் ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் தமிழில் எதிரி, அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருடைய உயரம் 5.5 ஆகும்.

சிம்ரன் : சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என விஜய்க்கு ஏற்ற ஜோடி என்ற பெயரை சிம்ரன் பெற்றார். இதற்கு முக்கிய காரணம் அவரின் உயரம். சிம்ரன் 5.6 உயரம் கொண்டவர். தற்போது சிம்ரன் அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகன் : ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகன். இதைத்தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவருடைய உயரம் 5.6 ஆகும்.

பிரியா பவானி சங்கர் : சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகான இடத்தை பிடித்துள்ளார். தற்போது ப்ரியா பவானி சங்கர் கைவசம் நிறைய படங்கள் உள்ளது. இந்நிலையில் இவருடைய உயரம் 5.7 அடி ஆகும்.

அனுஷ்கா ஷெட்டி : தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு இவரது உயரம் 5.7 ஆக உள்ளது.

தபு : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தபு. அதுவும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருடைய உயரம் 5.8 ஆகும். இவருக்கு எல்லா மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

நமீதா : தன்னுடைய கவர்ச்சி மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ள அவர் நடிகை நமீதா. மேலும் கவர்ச்சியான ஆடைகள் மூலம் அரேபிய குதிரை போல நமீதாவை திரையில் பார்ப்பது ரசிகர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். மேலும் நமிதா தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் ஹீரோவைவிடவும் மிகவும் உயரமானவர். நமிதாவின் உயரம் 6 அடி ஆகும்.

Next Story

- Advertisement -