வலிமை ரிலீஸ் இல்லை என்றவுடன் மகிழ்ச்சியில் பிரபல நடிகர்.. அவர் படத்தை வெளியிட முடிவு

எனிமி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அடுத்த படம் வீரமே வாகை சூடவா அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள வீரமே வாகைசூடவா திரைப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் து.ப. சரவணன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார், வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் தனது மிரட்டலான நடிப்பை காட்டியுள்ளார். அத்துடன் இந்தப் படத்தில் யோகிபாபு, பில்லி முரளி, மாரிமுத்து, துளசி, ரவீனா, மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

எனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு, தற்போது ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் கிறிஸ்மஸ் அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு இந்தப் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று காத்திருந்த நிலையில், ரசிகர்களுக்கு விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படமானது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த பொங்கலுக்கு வலிமை மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் கொரோன காரணமாக வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரமே வாகைசூடவா படத்திற்கு போட்டிகள் இல்லை என்று அறிந்த விஷால், அந்த படத்தின் விலையை ஏற்றி உள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விநியோகஸ்தர்கள், இவ்வளவு விலைக்கு வாங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் இலவசமாக விநியோகம் செய்யுங்கள் டிக்கெட் விற்பனையை பார்த்துவிட்டு படத்தின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

வீரனே வாகைசூடவா திரைப்படத்தில் விஷால் அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைக்களத்தை கொண்டது தான் இந்தப்படத்தின் கதை. எனவே முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் விஷாலின் வீரமே வாகை சூடவா திரைப்படத்தை திரையரங்கில் தைப்பொங்கல் அன்று காண்பதற்கு ரசிகர்கள் திட்டம் போட்டு விட்டனர்.

மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பதால் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீரமே வாகை சூட வா திரைப்படம் பூர்த்தி செய்யும். அத்துடன் இந்தப் படம் உலகமெங்கும் பொங்கல் தினத்தன்று தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்