Ajith: உலகம் சுற்றும் வாலிபனுக்கு ஹாப்பி பர்த்டே.. 53 வயதில் அஜித் சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு

ajith-actor
ajith-actor

Ajith Networth: அஜித் இன்று தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதற்கு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களும் சோசியல் மீடியாவில் இதை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இன்று மங்காத்தா, தீனா போன்ற படங்களும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

அதனால் தியேட்டர்களிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. மேலும் தியேட்டர் உள்ளேயே பட்டாசு வெடித்து அஜித் பிறந்தநாளை அவர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.

இப்படி ஏகே இன்று ட்ரெண்டிங்காக இருக்கும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு விவரமும் தெரிய வந்துள்ளது. அதன்படி இவர் சேர்த்து வைத்த சொத்துக்களின் மதிப்பு கிட்டத்தட்ட 400 கோடி ஆகும்.

அஜித்தின் சொத்து விவரம்

அதில் இவருடைய சம்பளமே 160 கோடி என்கின்றனர். மேலும் திருவான்மியூரில் இவருக்கு சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர பங்களா இருக்கிறது. அது தவிர இன்னும் சில அசையா சொத்துக்களும் உள்ளது.

மேலும் ரேஸ் பிரியரான இவரிடம் பல மாடல் பைக் மற்றும் கார்கள் உள்ளன. அதிலும் இன்று அவருடைய மனைவி ஷாலினி பிறந்தநாள் பரிசாக டுகாட்டி பைக் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார்.

இப்படி அஜித்தின் பிறந்தநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபனாக என்ஜாய் செய்து வரும் AK-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Advertisement Amazon Prime Banner