ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எல்லாத்தையும் திராட்டில் விட்ட விஷால்.. நம்பியதெல்லாம் வீணா போச்சு

விஷால் தற்போது லத்தி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஷால் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஏற்கனவே விஷால் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்போது தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி போலவே காட்சி அளிக்கிறார்.

இந்நிலையில் லத்தி படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க தலைவராக பணியாற்றி உள்ளனர். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கூட நடிகர் சங்க தலைவராக இருந்துள்ளர். ஆனால் நடிகர் சங்க கட்டிடம் தர வேண்டுமென தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு முறை தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டிதருகிறோம் என பல நடிகர்கள் வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர். அதேபோல் நடிகர் விஷால் நடிகர் சங்கத் தேர்தல் வெற்றி பெற்றவுடன் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

அதாவது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தான் எங்கள் முதல் பணி அதற்காகத்தான் இந்த எலக்ஷனில் போட்டியிட்டு வென்று இருக்கும் என்றெல்லாம் வீர வசனம் பேசினார். மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் எனக்கு திருமணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் இப்பொழுது எனக்கு என்ன என்று விஷாலும், அவரது குழுவும் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் மட்டும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்தால் கண்டிப்பாக எளிதில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்கலாம். மேலும் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

ஆனால் விஷால் இப்படத்தில் இருந்து பாதியிலேயே சென்றுவிட்டார். மேலும், எல்லோருமே ஒரு விஷயத்தை தொடங்கும் போது ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் அதன் பின்பு சோர்வடைந்து விடுவார்கள். விஷாலும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பதை நிரூபித்துள்ளார். ஆரம்பத்தில் நடிகர் சங்க கட்டிடத்தில் காட்டிய உத்வேகம் தற்போது விஷாலுக்கு சுத்தமாக இல்லை. எல்லாவற்றையும் திராட்டில் விட்டுவிட்டார்.

- Advertisement -

Trending News