ரோகினி மூஞ்சில் கரியை பூசும் விஜயாவின் மகன்.. 2 மணி நேரம் அமர்களம் பண்ண போகும் முத்து மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி ஒரு பணக்கார வீட்டு கல்யாணத்துக்கு போவதற்கு முடிவு பண்ணினார். அங்கே மனோஜையும் கூட்டிட்டு போய் ஜாலியாக என்ஜாய் பண்ணி குடும்பத்திற்கு ஒரு வாரிசை கொடுக்கலாம் என்று ஆசைப்பட்டார். அதற்கு ஏற்ற மாதிரி மனோஜும் ரோகிணியுடன் கிளம்பும் நேரத்தில் மனோஜ்க்கு பெரிய ஆஃபர் வந்துவிட்டது.

அதனால் மனோஜ் பெரிய ஆஃபர் கை நிறைய பணம் வரும், நான் கடையிலிருந்து வியாபாரம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும். நீ மட்டும் போயிட்டு வா என்று ரோகினியை கல்யாணத்துக்கு அனுப்பி வைத்து விட்டார். அடுத்ததாக மனோஜ் கடையில் இருக்கும் பொழுது நிறைய பொருட்களை வாங்குவதற்கு இரண்டு நபர்கள் வந்து விட்டார்கள்.

அவமானப்பட போகும் ரோகினி

அவர்கள் இஷ்டத்துக்கு பொருட்களை வாங்கிவிட்டார்கள். இதற்கு பில் போடும் பொழுது அந்த நபர்கள் பில் போட வேண்டாம். இதெல்லாம் ஒரு வியாபார யுக்தி என்று மனோஜிடம் சொல்லி ஏமாற்றி விட்டார்கள். அதனால் இந்த மக்கு மனோஜ் பில் எதுவும் போடாமல் பொருட்களை கொடுத்து பணமாக 4 லட்ச ரூபாயை வாங்கி விட்டார்.

இதற்கிடையில் முத்து மற்றும் மீனா கொஞ்சம் கொஞ்சமாக மாடியில் ஒரு ரூம் கட்டி நம் வாழலாம் என்று கனவு காண்கிறார்கள். இதற்கு அடிக்கல் நாட்டும் விதமாக பாட்டி மீனாவிற்கு போட்ட நகை அனைத்தும் விஜயாவிடம் தான் கொடுத்து வைத்திருக்கிறார். அதனால் அந்த நகையே வாங்கி மொட்டை மாடியில் ரூம் கட்டுவதற்கு பயன்படுத்தலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

அடுத்ததாக மனோஜ் கடையில் அந்த பணத்தை எடுத்துட்டு பொருட்களை வாங்கலாம் என்று முடிவு பண்ணி நிலையில் அந்த பணம் அனைத்தும் கள்ள நோட்டு என்று தெரிய வருகிறது. இதனால் எதுவும் பண்ண முடியாமல் மனோஜ் மொத்தமாக ஏமாந்து போய்விட்டார். அதன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கொடுக்க முடியாது.

ஏனென்றால் விற்பனை செய்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் பில் போடாமல் அவர்கள் நல்ல தெளிவாக மனோஜை ஏமாற்றி பொருட்களை வாங்கிட்டு போயிருக்கார்கள். இதனால் இந்த பேக் மனோஜ் கடைசியில் விஜயா காலடியில் விழுந்து உதவி கேட்கிறார். விஜயாவும் வழக்கம்போல் மனோஜை காப்பாற்றுவதற்காக மீனா கொடுத்த நகையை அடகு வைத்து பணத்தை ஏற்பாடு பண்ண சொல்லி கொடுக்கிறார்.

மனோஜ், மீனா நகையை எடுத்துட்டு அடகு வைக்க போனால் அவர் கேட்ட 4 லட்ச ரூபாய் கிடைக்கவில்லை. இதனால் மனோஜ் அந்த நகை அனைத்தையும் விற்கிறார். இது தெரியாத முத்து எதார்த்தமாக மீனா கொடுத்த நகையை அண்ணாமலையிடம் கேட்கிறார். உடனே அண்ணாமலை விஜயாவை கூப்பிட்டு மீனா நகையை திருப்பிக் கொடுக்க சொல்கிறார்.

இதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் விஜயா, மனோஜிடம் எப்படியாவது நகையே வாங்கிட்டு வா என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் நான் நகை அனைத்தையும் அடகு வைக்கவில்லை விற்று விட்டேன் என்று சொல்கிறார். இதை கேட்டு அதிர்ச்சியான விஜயா என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார்.

பிறகு நகை கேட்கும் பொழுது விஜயாவால் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மனோஜ் ஏமாந்த விஷயம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கு தெரிய வரப்போகிறது. அத்துடன் கல்யாணத்துக்கு போயிட்டு வீட்டுக்கு திரும்பும் ரோகினிக்கு மனோஜ் செய்த காரியம் பெருத்த அவமானத்தை கொடுக்கப் போகிறது. அந்த வகையில் இந்த கண்கொள்ளா காட்சியை நாளை மதியம் தொடர்ந்து 2 மணி நேரம் பார்த்து கொண்டாட போகிறோம்.

அந்த வகையில் நாளைக்கு முத்து மற்றும் மீனாவின் அமர்க்களமான ஆட்டத்தை பார்த்ததோடு மட்டுமில்லாமல் ரோகிணி மூஞ்சியில் மனோஜ் கரியை பூசிய அவமானத்தையும் சேர்த்து பார்க்க போகிறோம்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -