Gossip: அப்படி என்னதான் வசியம் செஞ்சாரோ தெரியலையே நடிகர் அந்த நடிகையிடம் இப்படி மயங்கி போய் இருக்கிறார் என கோலிவுட் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஏற்கனவே இந்த நடிகையால் நடிகரின் குடும்பத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது.
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் கதையாக நடிகரின் பிறந்தநாளுக்கு நடிகை ஒரு போட்டோவை வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருந்தார். அதுவும் பூதாகரமாக வெடித்து அடுத்த பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது.
இது பத்தாதுன்னு நடிகரின் நண்பர் வீட்டு மாடியில் நடிகை குடியேறியதும் பரபரப்பை கிளப்பியது. ஆனால் நடிகர் தன்னை பற்றி வரும் எந்த சர்ச்சைக்கும் மறைமுகமாக கூட விளக்கம் கொடுக்கவில்லை.
நடிகரை வசியம் செய்த நடிகை
அதே சமயம் நடிகையை ரகசியமாக சந்திப்பது பார்ட்டி என சமாச்சாரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியலையே. நடிகர் இப்போது தான் புது அவதாரம் எடுத்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்த செய்தி எல்லாம் எதிர்காலத்தை பாதிக்கும் என வெளிப்படையாகவே சிலர் பேசி வருகின்றனர். அப்படித்தான் நடிகை தற்போது நடித்து வரும் படத்தில் சில பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.
சொல்லப்போனால் நடிகையை சோலோ ஹீரோயினாக வைத்து படத்தை எடுப்பதே நடிகருக்கு நெருக்கமானவர் தான். அதனால் இந்த பொருளாதாரப் பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என நடிகை ஹீரோவுக்கு ஒரு போன் போட்டு இருக்கிறார்.
உடனே 20 கோடியை தூக்கி கொடுத்து விட்டாராம் நடிகர். இதுதான் கோடம்பாக்கம் வட்டாரத்தில் அதிர்ச்சி விலகாத நிலையில் பேசப்பட்டு வருகிறது. அப்படி என்னதான் அந்த நடிகை கிட்ட இருக்கோ தெரியலையே என சிலர் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.