விஜயாவிடம் மானங்கெட்டு போய் நிற்கும் முத்து.. மீனாவை பலிகடாக ஆக்கிய ரோகினி, ஏமாறப்போகும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவை ஏதாவது ஒரு விதத்தில் சீண்டிகிட்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுருதி அம்மா விஜயா வீட்டுக்குள் நுழைந்து கலகத்தை மூட்டிவிட்டார். அதாவது மாடியில் ஒரு ரூம் கெட்ட போகிற விஷயத்தை சுருதி சொல்லி இருக்கிறார். ஆனால் அதற்கு பணத்தட்டுப்பாடு இருக்கிறது என்பதையும் உளறி இருக்கிறார்.

இதனால் இந்த விஷயத்தை வைத்து முத்துவை பிரச்சினையில் மாட்டி விடலாம் என்று ஸ்ருதி அம்மா 5 லட்சம் ரூபாய் செக்கு எடுத்து வந்து உதவி பண்ணுகிறேன் என்ற பெயரில் அண்ணாமலை இடம் கொடுக்கிறார். இதனைப் பார்த்த முத்து சும்மாவா இருப்பார், அப்பா மானத்துக்கு ஒரு களங்கம் ஏற்பட்டது என்று ஆக்ரோஷமாக பொங்க ஆரம்பித்து விட்டார்.

அதாவது நீங்க யாரு எங்க வீட்ல ரூம் கட்டுவதற்கு பணம் கொடுக்க, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பு இருந்தால் உங்கள் மகள் வீடு கட்டுவதற்கு இடம் வாங்குவதற்கு உதவி பண்ணுங்க. நாங்க யாராவது பணம் வேண்டும் உதவி பண்ணுங்க என்று உங்களிடம் கேட்டோமா. எதற்கெடுத்தாலும் சும்மா செக் எடுத்து வந்து நீட்டிக்கிட்டு ஏன் இங்கு நிற்கிறீர்கள்.

ஓவராக துள்ளும் மனோஜ்

உங்களிடம் அதிகம் பணம் இருக்கு, அதை செலவழிக்க வேண்டும் என்றால் ஏதாவது அனாதை ஆசிரமத்திற்கு போய் உதவி பண்ணுங்கள் என்று முத்து சரமாரியாக சுருதி அம்மாவுக்கு பதிலடி கொடுத்தார். ஆனால் இதை பொறுக்க முடியாத மனோஜ், எல்லா முடிவும் நீயே உன் இஷ்டத்துக்கு எடுத்தால் எப்படி. அப்பா அம்மாக்கு பிறகு நாங்கள் தான் இந்த வீட்டில் மூத்தவர்கள்.

எங்களிடம் எதுவும் கேட்காமல் நீயே முடிவு பண்ணுகிறாய். சுருதி ரவிக்கு தனியாக வீடு கட்டி கொடுத்து வெளியே போக வேண்டும். நாங்களும் அப்படியே வெளியே போக வேண்டும். கடைசில இந்த வீட்டை நீ மட்டும் ஆட்டைய போட்டுரலாம்னு சுயநலமாக யோசிக்கிறியா என்று பேசுகிறார். இதனைக் கேட்ட முத்து இனி நான் பேசமாட்டேன் என் கை தான் பேசும் என்று மனோஜை வெளுத்து வாங்குகிறார்.

ஆக மொத்தத்தில் சுருதி அம்மா ஆசைப்பட்ட விஷயம் நடந்து முடிந்து விட்டது. பிறகு அண்ணாமலை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் இப்பொழுது கிளம்புங்கள் என்று ஸ்ருதி அம்மாவை அனுப்பி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து விஜயா, மீனா மற்றும் முத்துவை ரொம்பவே அசிங்கப்படுத்தி இவர்களுக்கெல்லாம் ரூம் இல்லனா என்ன. அப்படி ஏதாவது தனியாக இருக்கனும்னா ஏதாவது குடிசையில் இருந்து தங்க வேண்டியதுதானே.

அதற்காக நம்ம ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் சொல்கிறார். அத்துடன் இது எங்க அப்பா எனக்காக கட்டண வீடு. அதை நான் யாருக்காகவும் தர மாட்டேன் என்று பேசுகிறார். அப்பொழுது முத்து இந்த ரூம் எல்லாம் இப்பொழுது வேண்டாம் அப்பா மெதுவாக பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

ஆனாலும் பிரச்சனை முடிந்த பாடாக இல்லை முத்துவுக்கு பெரிய தலைவலி வந்த நிலையில் நண்பரை கூட்டிட்டு குடிப்பதற்கு போய்விட்டார். அங்கே நண்பரிடம் புலம்பித் தவித்து வீட்டிற்கு வந்த முத்து குடித்து இருப்பதை பார்த்து மீனா கோபப்படுகிறார். இதை அண்ணாமலையும் பார்த்து இந்த விஷயத்திற்கு இப்பொழுது தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் முத்து, அண்ணாமலை இடம் இப்போதைக்கு எங்களுக்கு எந்த ரூமும் வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். உடனே மனோஜ், கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்து மீனாவுக்கு நகை வாங்கி கொடுத்தது போல நீயே சம்பாதித்து வீடு கட்ட போறியா என்று நக்கல் அடிக்கிறார். அத்துடன் ரோகிணி, மீனாவிடம் உடனே நீங்க சவால் ஏதும் போட்டு விடாதீர்கள் என்று சொல்கிறார்.

ஆனால் மீனா இதுதான் சான்ஸ் என்று முத்துவிடம் எதுவும் கேட்காமல் என் வீட்டுக்காரர் சம்பாதித்து எனக்கு மாடியில் ரூம் கட்டி தருவார் என்று சத்தியம் பண்ணி விடுகிறார். இதைக் கேட்ட முத்து திருட்டு முழியாக முழித்துக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் இந்த முத்துவும் மீனாவும் விஜயாவிடம் சூடு சொரணை இல்லாமல் கடைசிவரை மானம் கெட்டு போய் நிற்கப் போகிறார்.

இந்த ரோகிணியும் இதுதான் சான்ஸ் என்று மீனாவை பலிகாடாக சிக்க வைத்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் ஓவராக ஆட்டம் போடுவதற்கு மனோஜ் பண்ணும் பிசினஸில் ஏமாந்து ஒன்னும் இல்லாமல் நிற்கும் பொழுது தான் ரோகிணி பற்றிய விஷயங்கள் தெரியவந்து அவமானப்பட போகிறார்.

சிறகடிக்கும் சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -