முத்து அழுது புலம்பியும் கல்நெஞ்சகாரி ஆக இருக்கும் விஜயா.. மீனா விட்ட சவாலுக்கு அடிக்கல் நாட்டிய ஆட்டநாயகன்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், தன்னுடைய அப்பா நினைத்தபடி ஒரு ரூம் கூட கட்ட முடியவில்லை. இதற்கு எங்க அம்மாவே தடங்கலாக இருக்கிறார் என்று முத்து ரொம்பவே வருத்தப்பட்டு குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். அத்துடன் வீட்டிற்கு வந்தும் மீனாவிடம் புலம்புகிறார். இதை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அப்பொழுது முத்து, எங்க அப்பா எங்களை வளர்ப்பதற்கு என்ன கஷ்டப்பட்டாங்க, அதுலயும் மனோஜ் ரவி கேட்டதெல்லாம் செய்து கொடுத்தார். இந்த வீடு கட்டுவதற்கு படாத பாடுபட்டார் என்று அனைத்தையும் எடுத்து சொல்லி அண்ணாமலையை நினைத்து வேதனைப்படுகிறார். இதைக் கேட்டு அண்ணாமலை நொறுங்கிப் போய் கண்ணீர் வடிக்கிறார். முத்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதில் அண்ணாமலைக்கு மட்டுமில்லை பார்க்கிற நம்மளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது.

மீனா சபதத்தை நிறைவேற்ற போகும் முத்து

அந்த அளவிற்கு முத்து அந்த வீட்டில் படும் கஷ்டங்களையும், அவமானங்களையும் வேதனையுடன் தெரியப்படுத்துகிறார். ஆனால் இப்படி முத்து அழுது புலம்பிய நிலையில் கூட விஜயா மனசு கல்நெஞ்சம் ஆகத்தான் இருக்கிறது. இவன் குடித்துவிட்டு உளறுகிறான் எல்லாரும் ஏன் வேடிக்கை பார்க்கணும் ரூமுக்கு போக என்று சாதாரணமாக விஜயா சொல்லி விடுகிறார்.

போதாதற்கு இந்த மனோஜ் மற்றும் ரோகினி குடித்துவிட்டு வழக்கம் போல முத்து தகராறு பண்ணுகிறார் என்பது போல் முத்துவை மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் முத்து மனதிற்குள் இருக்கும் வேதனையை பார்க்கும் பொழுது உண்மையிலேயே அம்மா அப்பா அண்ணன் தம்பிகள் என்று எல்லாம் இருந்தும் ஒரு அனாதை போல் தான் இருக்கிறேன் என்ற உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

இதனை அடுத்து மறுநாள் காலையில் முத்து பூஜை புனஸ்காரம் பண்ணி பக்தி மயமாக இருக்கிறார். இதை பார்த்ததும் அனைவரும் கேலி கிண்டல் பண்ணி இரவு குடிப்பது பகல்ல வேஷம் போடுவது என்று ரோகிணி சொல்கிறார். அத்துடன் மனோஜ், இரவு பண்ணிய பாவத்துக்கு மன்னிப்பு தேடுகிறாரோ என்று நக்கல் அடிக்கிறார். உடனே மீனா அவர் எந்த பாவமும் பண்ணவில்லை என்று முத்துவிற்கு சப்போர்ட்டாக பேசுகிறார்.

அப்பொழுது முத்து, அண்ணாமலையிடம் அப்பா நீங்க எதற்காகவும் நினைத்து கவலைப்படாதீர்கள். நான் இருக்கும் வரை உங்களுக்கு எந்த வித கஷ்டத்தையும் கொடுக்க மாட்டேன். அதனால் இப்பொழுது வீடு கட்ட வேண்டும் என்று எண்ணத்தை விட்டு விடலாம். பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ் அப்படி என்றால் நீ வீட்டை விட்டு போகிறாயா என்று கேட்கிறார்.

உடனே மீனா, நாங்கள் எதற்கு இங்கிருந்து போக வேண்டும் என் கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து எனக்காக மாடியில் ஒரு ரூம் கட்டிக் கொடுப்பார் என்று சபதம் போடுகிறார். அந்த வகையில் முத்துவிடம் கேட்காமல் மீனா சபதம் போட்டாலும் இதை எப்படியாவது நிறைவேறுத்தி ஆக வேண்டும் முத்து நினைக்கிறார். அதனால் காலையிலேயே எங்கேயோ போயிட்டு வந்து மீனாவிற்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக கார் டிக்கில் ஏதோ ஒரு விஷயத்தை வைத்திருக்கிறார்.

மேலும் மீனாவை கூப்பிட்டு அதை காட்டப் போகிறார். அந்த வகையில் மாடியில் ரூம் எடுப்பதற்கு முத்து ஏதோ பிளான் பண்ணிவிட்டார். இதனை தொடர்ந்து கூடிய விரைவில் மீனா போட்ட சவாலில் ஜெயித்துக் காட்டும் விதமாக முத்து மாடியில் ரூம் கட்டி அப்பா மனசை குளிர வைத்து விடுவார். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ரோகிணி பற்றிய ஒரு விஷயமாவது வெளியே வந்தால் இந்த நாடகம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வந்துவிடும்.

அதாவது எங்க அப்பா கொடுத்த பணத்தை வைத்து தான் மனோஜ் பிசினஸ் பண்ணுகிறார் என்று பொய் பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றி வரும் ரோகிணிக்கு ஜீவா மூலமாகத்தான் பணம் கிடைத்தது என்று முத்துவுக்கு தெரிய வேண்டும். அதை முத்து அனைவரும் முன்னாடியிலும் போட்டு உடைத்து ரோகினி மூஞ்சில் கரியை பூச வேண்டும். இது இன்னும் சில நாட்களில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -