முத்து மீனாவை ஆட்டிப்படைத்த மனோஜ்க்கு ஏமாற்றம்.. ஓவரா ஆட்டம் போட்ட ரோகிணிக்கு ஏற்படப் போகும் அவமானம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் அளவிற்கு மனோஜ் ரோகினிக்கு பெருத்த அவமானம் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ரோகிணி, மனோஜை எப்படியாவது வசியம் பண்ணி தன் பக்கம் இழுத்து விட வேண்டும் என்று குதுகலத்திற்கு பிளான் போட்டார்.

ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக மக்கு மனோஜ்க்கு ஒரு ஏமாற்றம் நடந்து விட்டது. அதாவது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் நபர் நிறைய பொருட்கள் வேண்டும் என்று லிஸ்ட் கொடுத்து இருக்கிறார். அதன்படி மனோஜ் நான் அனைத்தையும் இருந்து சமாளித்துக் கொள்கிறேன். நீ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்துக்கு போயிட்டு வா என்று டாடா காமித்தார்.

மொத்தமாக ஏமாந்த மனோஜ்

இங்கேதான் மனோஜ்க்கு ஒரு ஆப்பு இருக்கிறது. அதாவது மனோஜிடம் வாங்கிய பொருளுக்கு கொடுத்த பணம் அனைத்தும் கள்ள நோட்டாக மாறிவிட்டது. இது தெரிந்த போலீஸ் இதெல்லாம் கள்ள நோட்டு என்று அனைத்தையும் எடுத்துட்டு போய் விட்டார். ஆக மொத்தத்தில் மக்கு மனோஜ் தலையில் யாரோ ஒருத்தர் மிளகாய் அரைத்து விட்டார். இது யாருக்கு சந்தோசமோ இல்லையோ பார்க்கும் நமக்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த கண்கொள்ளாக் காட்சி அனைத்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 4.30 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக போகிறது. அது மட்டுமல்லாமல் ஏமாந்த மனோஜ் கடைசியில் விஜயா காலடியில் விழுந்து கெஞ்சுகிறார். விஜயா, மனோஜை வெளுத்து வாங்கும் அளவிற்கு அடி பின்னி விடுகிறார். கடைசியில் விஜயாவிடம் உதவி கேட்டு மீனா கொடுத்த நகையை தரும்படி கெஞ்சுகிறார்.

விஜயாவும் வழக்கம்போல் மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணும் விதமாக நகை அனைத்தையும் அடகு வைக்க கொடுக்கிறார். அடகுக்கு எடுத்துட்டு போன மனோஜ்க்கு தேவையான 4 லட்ச ரூபாய் கிடைக்காததால் அந்த நகையை விற்று விடுகிறார். இந்த சமயத்தில் முத்து, மாடியில் ரூம் கட்டுவதற்கு மீனாவின் நகையை அண்ணாமலை இடம் கேட்கிறார்.

உடனே அண்ணாமலை, விஜயாவிடம் மீனா கொடுத்த நகையே கேட்கிறார். அப்பொழுது விஜயா, நான் கொடுத்த நகையை திருப்பிட்டு வா அப்பா கேட்கிறார் என்று சொல்லிய நிலையில் மனோஜ் நான் அதை அடகு வைக்கவில்லை விற்று விட்டேன் என்று வெட்கமே இல்லாமல் சொல்லுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயா எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்க போகிறார். கடைசியில் மீனா முத்துவை அசிங்கப்படுத்தி பேசிய மனோஜ் மற்றும் ரோகினிக்கு ஏற்பட்ட அவமானமாக தண்டனை கிடைக்கப் போகிறது.

சிறகடிக்கும் சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -