ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

மீனா செய்யும் வேலைக்கு பணத்தை கொடுத்த விஜயாவின் மருமகள்.. ஓவராக ஆட்டம் போடும் ரோகினி

Siragadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சிறகடிக்கும் ஆசை. இதில் முத்து மீனாவின் கணவன் மனைவி வாழ்க்கை ரொம்பவே யதார்த்தமாகவும், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத மனம் ஒத்து தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இதே வீட்டில் இருக்கும் அண்ணன் மனோஜ் மற்றும் தம்பி ரவி இவர்கள் இருவரும் படித்து நல்ல வேலையில் இருப்பதால் அம்மாவாக இருக்கும் விஜயா ஓரம் வஞ்சம் காட்டி வருகிறார்.

அதுவும் பெற்ற மகன்களிடமே பாகுபாடு காட்டி பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் மருமகளை மட்டும் வச்சா பார்ப்பாங்க. முத்துவை கல்யாணம் பண்ணிட்டு வந்த மீனா ஏழை வீட்டு பெண் என்பதால் வேலைக்காரியை விட மோசமாக மாமியார் கொடுமைப்படுத்துகிறார். இருந்தாலும் மீனா இது நம்ம குடும்பம் என்று நினைத்து எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்.

ஆனால் இதை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு மாமியார் ரொம்பவே டார்ச்சர் கொடுக்கிறார். போதாக்குறைக்கு மூத்த மருமகளாக இருக்கும் ரோகிணி அவருடைய வீட்டுக்காரர் டிரெஸ்ஸை மொதக்கொண்டும் துவைப்பதற்கு மீனாவிடம் கொடுக்கிறார். ஆனால் மீனா என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். பிறகு கடைசி மருமகள் சுருதியும் அவருடைய டிரஸ்சை கொடுக்கிறார்.

Also read: குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல் சீரியல்.. இப்போ டிஆர்பி ரேட்டிங்கில் கெத்து காட்டும் அப்பத்தா

அதே நேரத்தில் மீனா அதிகமாக வேலை பார்க்கிறார் என்ற ஒரு குற்ற உணர்ச்சியில் அவருக்கு சப்போர்ட்டாக மாமியாரிடம் பேசுகிறார். கடைசியில் மீனா பார்க்கிற வேலைக்கு ஒரு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக சுருதி, மீனா பார்க்கும் வேலைக்கு 2000 ரூபாய் பணத்தை கொடுக்கிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மீனா அப்படியே வேதனையில் துவண்டு போய்விட்டார்.

அந்த நேரத்தில் மாமியார் மற்றும் ரோகினியும் வேலைக்காரி என்று நினைத்து உனக்கு சம்பளம் கொடுக்கிறார் என்று நக்கல் அடித்து பேசுகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சுருதியின் கணவர் ரவி பொண்டாட்டியிடம் நீ பண்ணியது தவறு என்று கண்டிக்கிறார். ஆனாலும் சுருதி நான் எந்த ஒரு தப்பான எண்ணத்திலும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை. அவங்க பாக்குற வேலைக்கு ஒரு மதிப்பு வேண்டும் என்ற ஒரு நல்ல இனத்தில் தான் நான் அப்படி பண்ணினேன் என்று வாக்குவாதம் பண்ணுகிறார்.

இதனை அடுத்து நடந்த விஷயத்தை அனைத்தும் மீனா, முத்துவிடம் கூறி ரொம்பவே மனமடைந்து பேசுகிறார். முத்துவும் நீதான் எதற்கெடுத்தாலும் இது என்னுடைய குடும்பம் நீங்க எதுவும் பேசாதீர்கள் என்று எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கிட்டு வந்த என்று கூறுகிறார். இதற்கிடையில் ரோகிணி எந்த மாதிரி குடும்பத்தில் இருந்து எப்படி வந்தும் என்பதே மறந்துவிட்டு ஓவராக அந்த வீட்டில் ஆட்டம் போட்டு வருகிறார். கூடிய விரைவில் இவருடைய உண்மையான முகத்திரை கிழியும் பொழுது ரோகினி அந்த வீட்டில் இருப்பாரா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கிறது.

Also read: ஜனனியின் அப்பா எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி.. அப்பத்தாவிற்கு ஆப்பு வைக்க போகும் நாச்சியப்பன்

- Advertisement -spot_img

Trending News