பொய் பித்தலாட்டம் பண்ணிய ரோகிணிக்கு முத்து வைக்கும் ஆப்பு.. அப்பாவாக போகும் மனோஜ் கல்யாணி போட்ட ஸ்கெட்ச்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் மீனா, ரோகிணியின் மாமா பிரவுன்மணியே பார்த்த விஷயத்தை முத்துவிடம் சொல்கிறார். உடனே இருவரும் சேர்ந்து மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ரோகினி மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று முத்து கூறுகிறார். மீனாவும் ஆமாம் நீங்க சொல்லும் பொழுதெல்லாம் எனக்கு சந்தேகம் வரவில்லை.

ஆனால் இன்று ரோகினிடம் உங்க மாமாவை பார்த்தேன் என்று சொன்னதும் முகமே மாறிவிட்டது. ஏதோ தவறாக தெரிகிறது என்று மீனா, முத்துவிடம் சொல்கிறார். இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரோகினி அனைத்தையும் ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். அத்துடன் இவர்கள் இருவருக்கும் நம் மீது சந்தேகம் வந்துவிட்டது.

ரோகிணி மனோஜ்க்கு விரித்த வலை

அதனால் வீட்டில் இருப்பவர்களிடம் எதையாவது உளறி விட்டால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று ஒரு பிளானை போட்டு விட்டார். அந்த வகையில் ரோகினி, தோழி வித்யாவிடம் போன் பண்ணி பிரவுன் மணி துபாயில் இருப்பது போல் செட்டிங்கை போட்டு வீடியோ கால் பண்ண சொல்லு என்று ஐடியா கொடுக்கிறார். அதற்கேற்ற மாதிரி வித்தியாவும் பிரோன் மணியை கூட்டிட்டு ஒரு ஸ்டூடியோவில் வைத்து துபாயில் இருப்பது போல் வீடியோ கால் பண்ணுகிறார்.

உடனே ரோகினி வீடியோ காலில் பேசி அனைவரையும் நம்ப வைக்கிறார். அத்துடன் விஜயா, மனோஜ் மற்றும் முத்து அனைவரும் வீடியோவில் பிரவுன் மணியிடம் பேசுகிறார்கள். அப்பொழுது முத்து, நீங்கள் துபாயில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதை சொல்லத் தெரியாமல் பிரவுன் மணி தடுமாறுகிறார். உடனே ரோகினி போனை புடுங்கி நான் அப்புறமாக பேசுகிறேன் என்று சொல்லி கட் பண்ணி விட்டார்.

ஆனால் இதன் பிறகு தான் ரோகிணி மீது எனக்கு சந்தேகமே உறுதியாக இருக்கிறது என்று மீனாவிடம் முத்து சொல்கிறார். அதற்கு மீனா இப்ப என்ன சந்தேகம் அதுதான் அவர் வெளிநாட்டில் இருந்து போன் பேசுவதை நாம் அனைவரும் பார்த்தோம் என்று சொல்கிறார். அதற்கு முத்து இதுவரை அவர் ஒரு போன் கூட பண்ணியதே இல்லை. நேற்று நீ அவரை பார்த்ததாக சொன்னதுக்கு பிறகு தான் இன்று போன் பேசி இருக்கிறார்.

இதில் தான் ஒரு சந்தேகம் இருக்கிறது என்று ரோகினி மீது முத்து சந்தேகப்பட்டு விட்டார். இதனை தெரிந்து கொள்ளும் விதமாக முத்து அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் பிரவுன் மணி போட்டோவை அனுப்பி வைத்து யாராவது இவரை பார்த்தால் உடனே எனக்கு தகவல் சொல்ல சொல்லலாம் என்ற பிளானை போட்டு விட்டார்.

அதனால் கூடிய விரைவில் ரோகினி செய்த பொய் பித்தலாட்டங்கள் அனைத்தும் முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. ஆனால் அதற்குள் ரோகிணி மாட்டிக் கொண்டால் ஈசியாக தப்பித்து விட வேண்டும் என்பதற்காக மனோஜை தன்வசப்படுத்த வேண்டும் என்று தோழியிடம் கூறுகிறார். அதற்கு முதற்கட்டமாக மனோஜ் என்னை விட்டு பிரியாத அளவிற்கு நான் அவருடைய குழந்தைக்கு அம்மாவாக வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த வகையில் ரோகிணி கர்ப்பமாக இருப்பது போல் அடுத்த கட்ட விஷயங்கள் நகர போகிறது. இதனால் என்றைக்குமே கல்யாணி மாட்டிக் கொள்ள முடியாத அளவிற்கு ஒரு முடிவை எடுத்து மனோஜை பலிகாடாக ஆக்கப் போகிறார். ஆனால் அதற்குள் முத்து, ரோகினி பற்றிய விஷயங்களை தெரிந்து கொண்டால் நாடகம் சுவாரஸ்யமாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -