சுருதி அம்மா போட்ட பிளானில் மனோஜை வெளுத்து வாங்கிய முத்து.. தனிகுடித்தனம் போகப்போகும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மீனாவிற்கு தனியாக ஒரு ரூம் வேண்டும் என்று மொட்டை மாடியில் கட்டுவதற்கு அண்ணாமலை முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அதை கட்டுவதற்கு குறைந்தபட்ட ஐந்து லட்சம் ரூபாய் ஆகும் என்பதற்காக லோன் வாங்கலாம் என நினைக்கிறார். அதற்காக மாத தவணையாக மூன்று மகன்களும் பணம் கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார்.

ஆனால் மனோஜ் என்னால நீங்க கேட்கிற பணத்தை கொடுக்க முடியாது கம்மியாக தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். பிறகு முத்து மீனாவும் சேர்ந்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள். அதே மாதிரி ரவி மற்றும் சுருதியும் தருவதாக வாக்கு கொடுத்து விட்டார்கள். பிறகு மீனா சமையல் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ரோகினி, மாமாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நீங்களும் பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்களா என கேட்கிறார்.

விஜயாவை பிளாக்மெயில் பண்ணும் ரோகினி

அதற்கு மீனா நான் ஏன் நல்ல பேர் வாங்கணும், ஏற்கனவே எனக்கு மாமாவிடம் நல்ல பெயர்தான் இருக்கு என்று பதிலடி கொடுத்தார். இப்படியே மாத்தி மாத்தி பேசி வாக்குவாதமாக மாறிவிட்டது. இதனை பார்த்து சுருதி சமாதானப்படுத்தி ரோகினியை கூட்டிப் போய் விடுகிறார். அந்த நேரத்தில் முத்துவும் மனோஜ் பேசியதை நினைத்து ரொம்பவே கடுப்பில் வந்திருக்கிறார்.

இந்த சமயத்தில் வீடு கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடந்த பொழுது விஜயா, எங்க அப்பா விட்டு பாத்திரத்தை வைத்து நான் யாருக்கும் பணம் தர மாட்டேன். வேணும்னா மீனா முத்துக்கு மேல ஒரு குடிசை மாதிரி கட்டி அதுல இருக்க வைங்க என்று சொல்கிறார். உடனே மீனாவும் பதிலடி கொடுத்து பேசிய நிலையில் அனைவரையும் அண்ணாமலை சமாதானப்படுத்தி வேலையை பார்க்க சொல்லிவிட்டார்.

இதையெல்லாம் சுருதி எதேர்ச்சியாக அம்மாவிடம் சொல்லிய பொழுது இதை வைத்து ஒரு பிரச்சினையே பண்ணலாம் என்று ஸ்ருதி அம்மா முத்து வீட்டுக்கு வருகிறார். வந்ததும் பணக்கார திமிருடன் பேசும் சுருதி அம்மா இந்த வீடு கட்டுவதற்கு கூட என் வீட்டுக்காரர் தான் லோன் வாங்கி கொடுத்தாரு. அதே மாதிரி மேல வீடு கட்டுவதற்கு நான் பணம் தருகிறேன் என்று மட்டும் மரியாதை இல்லாமல் பேசினார்.

இதனை கேட்ட முத்து கோபத்தில் அதெல்லாம் ஒன்று வேண்டாம். எங்களுக்கு தேவையானதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் மனோஜ் வீடு தேடி வரும் வாய்ப்பை ஏன் மறுக்கிறாய். இந்த வீட்டில் எல்லாம் நீ சொல்றபடி தான் நடக்கணுமா. அப்பா அம்மாவுக்கு அடுத்து நான்தான் இந்த வீட்டில் பெரியவன் நான் சொல்றபடி தான் நீ நடந்து கொள்ளணும் நீ சரியான சுயநலவாதி என்று முத்துவை சொல்லுகிறார்.

இதைக் கேட்டதும் கோபப்பட்ட முத்து நானா சுயநலவாதி நீ தான் சுயநலவாதி என்று மனோஜை அடித்து சண்டை போடுகிறார். இதையெல்லாம் பார்த்த சுருதி அம்மா இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப சந்தோஷப்பட்டு கொள்கிறார். பிறகு அண்ணாமலை எல்லாத்தையும் தடுத்த நிலையில் ரோகிணி நாங்க தனிக்குடித்தனம் போகட்டுமா என்று கேட்கிறார்.

உடனே விஜயா நீங்க ஏன் போகணும், உங்களுக்கு இந்த வீட்டில் இருக்கிற எல்லா உரிமையும் இருக்கிறது என்று சொல்கிறார். கடைசியில் மீனா யாரும் எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டாம், என் வீட்டுக்காரர் சம்பாதித்து அதில் நாங்கள் மாடி கட்டிக் கொள்கிறோம் என்று சபதம் போடுகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -