விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக களம் இறங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனிடையே விஜய் சேதுபதி தற்போது இந்தியாவிலேயே அதிகம் பேசப்படும் நடிகராக மாறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து, விஜய் சேதுபதி மிரட்டியிருப்பார். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசன் கதை எழுதி நடிக்கும் தேவர்மகன்-2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.
மேலும் கார்த்தியுடன் சேர்ந்து ஜப்பான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக களமிறங்கும் உள்ளார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா திரைப்படத்தின் பார்ட் 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அத்திரைப்படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனிடையே விஜய்சேதுபதி புஷ்பா பார்ட் 2 திரைப்படத்தில் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி களமிறங்க உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி ஏற்கனவே ஹிந்தியில் நான்கு படங்களில் கமிட்டாகியுள்ள நிலையில், தற்போது ஜவான் திரைப்படம் 80 சதவிகிதம் வரை முடிவு பெற்றுள்ளது அடுத்த வருடம் ரிலீசாக உள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் களமிறங்குவார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தற்போது விஜய்சேதுபதி வில்லனாக பல மொழிகளில் நடித்து வருவது தமிழ் சினிமாவுக்கு பெருமையாகவும், இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் நடிகராகவும் விஜய்சேதுபதி களமிறங்கியுள்ளது அனைவருக்கும் பாராட்டை பெற்றுள்ளது.