காதல் மோகத்தில் கர்ப்பமாகி ரகசியமாக கருக்கலைப்பு செய்த விஜய் பட ஹீரோயின்.. இப்போ அந்தக் காதலும் இல்லையே!

தமிழ் சினிமாவில் விஜய்(vijay)யுடன் ஒரு படம் நடித்திருந்தாலும் அந்த படம் காலத்திற்கும் பேசும்படி பெயர் வாங்கிய நடிகை ஒருவர் தன்னுடைய காதல் மோகத்தால் கர்ப்பமாகி பின்னர் அதை ரகசியமாக கருக்கலைப்பு செய்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் நண்பன். 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது. விஜய்யின் வித்தியாசமான நடிப்பு இந்தப் படத்தில் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் முதன்முதலாக விஜய்க்கு ஜோடியாக நடிகை இலியானா நடித்திருந்தார். அதற்கு முன்பு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவரது நேரமோ, என்னமோ தமிழில் வரவேற்பு கிடைக்காமல் தெலுங்கில் செட்டிலானார்.

இது நிறைய நடிகைகளுக்கு நடப்பதுண்டு. தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும் நடிகைகள் தெலுங்குக்கு சென்று டாப் நடிகைகள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் இலியானாவும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கை தாண்டி ஹிந்தியிலும் அம்மணி ரொம்ப பிரபலம்.

இலியானா நீண்டநாட்களாக ஆண்ட்ரூஸ் என்ற வெளிநாட்டு காதலரை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். காதல் மோகத்தில் அம்மணி வெளிநாட்டு பெண் போல் எல்லை மீற கடைசியில் அது கருவுறும் நிலைக்குச் சென்றுவிட்டது.

இந்நிலையில் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் தனக்கு நெருக்கமான டாக்டரை சந்தித்து அந்த கருவை கலைத்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு சமீபத்தில் தன்னுடைய காதலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலில் தோல்வி அடைந்தார் என்பதும் கூடுதல் தகவல்.

கடந்த சில வருடங்களாக ரகசியமாக இருந்த தகவல் எப்படி வெளியானது என தெரியாமல் இலியானா மிகவும் வருத்தத்தில் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இலியானா மீண்டும் சினிமாவில் பரபரப்பாக வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ilena-cinemapettai
ilena-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்