ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பூஜா ஹெக்டே போல ராசியில்லாத நடிகையுடன் கோர்த்துவிட படும் விஜய்.. நடிச்ச 4 படமும் நாறிப்போன சோகக்கதை

Actor Vijay: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய் எதற்காக இப்படி ஒரு ராசி இல்லாத நடிகை உடன் கோர்த்து விடப்பட்டிருக்கிறார் என தளபதி ரசிகர்கள் புலம்புகின்றனர். ஏற்கனவே தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா ஹெக்டே உடன் இணைந்து பீஸ்ட் என்ற மொக்கை படத்தை கொடுத்தார்.

பூஜா ஹெக்டே-வை போலவே ராசி இல்லாத நடிகையாக பார்க்கப்படும் இன்னொரு ஹீரோயின் உடன் இப்போது விஜய் கோர்த்து விடப்பட்டிருக்கிறார். விஜய்யின் லியோ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கான ப்ரொமோஷன் பணிகள் கலை கட்டுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இணையும் தளபதி 68 படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டது.

Also Read: 200 கோடி சம்பளம் வாங்கிட்டு டீலில் விட்ட விஜய்.. ஒரு அடி எடுத்து வச்சா பத்து அடி சறுக்குது

இந்த படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் துவங்கப்பட்டுள்ளது. பிரபல டான்ஸ் மாஸ்டர் ஆன ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளார். இருப்பினும் தளபதி ரசிகர்களுக்கு இப்போது இருக்கும் கவலை என்னவென்றால் இந்த படத்தின் கதாநாயகியாக தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரியை எதற்காக தேர்வு செய்தனர் என்பது தான் கேள்வி.

இந்த படத்தின் பூஜை அன்று இவர்தான் கதாநாயகி என்பதை தெரிந்ததும் எல்லோருக்கும் தூக்கி வாரி போட்டது. காரணம் இவர் நடித்த நான்கு படங்களும் நாறிப்போன சோக கதை ஒரு செகண்ட் கண்முன் வந்து போனது இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான அப்ஸ்டார்ட்ஸ், அதன்பின் தெலுங்கில் கில்லாடி, தமிழில் விஜய் ஆண்டனி உடன் கொலை போன்ற மூன்று படங்களும் பிளாப் ஆனது.

Also Read: ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

அதுமட்டுமல்ல தமிழில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்னும் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியாக இருக்கக்கூடிய கதாநாயகியை தான் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் ஹீரோயின் ஆக தேர்வு செய்திருக்கிறார். தளபதி 68 படத்தில் விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார்.

இதில் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகனாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக முதலில் பிரியா மோகன் தேர்வு செய்து இப்போது மீனாட்சி சவுத்ரியை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.  இதற்கு முன்பு நான்கு மொக்க படத்தை கொடுத்த மீனாட்சி சவுத்ரியை எதற்காக வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் விஜய் உடன் கோர்த்து விட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கிரீனில் நினைத்தபடி ஒர்க் அவுட் ஆனால் மட்டுமே படம் வெற்றி பெறும். அப்படி இல்லை என்றால் மீனாட்சி சவுத்ரியின் நான்கு படங்களில் தளபதி 68 5வது படமாக இணைந்து விடும்.

Also Read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்த.. விஜய்க்கு ஜோடியான மீனாட்சி சவுத்ரி, காரணம் இதுதான்

- Advertisement -

Trending News