ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆடியோ லான்சுக்கு ஆப்பு வச்சது போல ட்ரெய்லர் வெளியிட கிளம்பிய சர்ச்சை.. விஜய் மேல அப்படி என்ன காண்டு

Leo – Vijay: சமீப காலமாகவே லியோ படத்திற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. அதில் ஆடியோ லான்ச் நடைபெறாது என வெளிவந்த அறிவிப்பு தான் ஒட்டு மொத்த ரசிகர்களையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஏனென்றால் இந்த ஒரு நிகழ்வுக்காக தான் அவர்கள் மாதக்கணக்கில் காத்திருந்தனர்.

அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் நடந்த அந்த சம்பவம் இப்போது வரை சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது. இருந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என தயாரிப்பு தரப்பு நாளுக்கு நாள் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிட்டு வருகிறது.

Also read: விஜய்யை சீண்டிப் பார்க்கும் கலாநிதி.. லியோ போஸ்டரால் ஏற்பட்ட குழப்பம்

அந்த வகையில் கடந்த வாரம் வெளியான செகண்ட் சிங்கிள் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லரும் அதிரிபுதிரியாக வெளியாக இருக்கிறது. அதன்படி நாளை வெளியாக உள்ள லியோ ட்ரெய்லரை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதில் தான் இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் எப்போதுமே விஜய் பட ட்ரெய்லர் வெளியாகும் போது திரையரங்குகளில் அதற்காக ஸ்பெஷல் ஸ்கிரீன் ஏற்பாடு செய்வார்கள். அதை காணவே ரசிகர்களின் கூட்டம் அங்கு திருவிழா போல் திரளும்.

Also read: தூக்கிட்டு வாங்க அந்த செல்லத்த.. விஜய்க்கு ஜோடியான மீனாட்சி சவுத்ரி, காரணம் இதுதான்

அதேபோல் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகமும் தங்களுடைய பார்க்கிங் ஏரியாவில் பிரம்மாண்ட ஸ்கிரீன் அமைத்து ட்ரெய்லரை வெளியிடுவார்கள். தற்போது லியோ படத்திற்கும் அதுபோன்று செய்வதற்காக அவர்கள் காவல்துறையிடம் அனுமதி கோரி இருக்கின்றனர். ஆனால் காவல் ஆணையரை சந்தித்து அனுமதி வாங்குங்கள் என்று கோயம்பேடு போலீஸ் தரப்பில் கூறிவிட்டார்களாம்.

இதை அடுத்து அனுமதி வாங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இருப்பினும் இசை வெளியீட்டு விழாவுக்கு நடந்தது போல் இப்போதும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என ரசிகர்கள் பதட்டத்தில் இருக்கின்றனர். இவ்வாறு லியோவுக்கு சுத்தி சுத்தி சிக்கல் வருவதை பார்த்த பலரும் விஜய் மேல் அப்படி என்னதான் இவர்களுக்கெல்லாம் காண்டு என வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

Also read: 200 கோடி சம்பளம் வாங்கிட்டு டீலில் விட்ட விஜய்.. ஒரு அடி எடுத்து வச்சா பத்து அடி சறுக்குது

- Advertisement -

Trending News