விஜய்யை வேறு பாதைக்கு அழைத்துச்செல்லும் அவரது மேனேஜர்.. கவலையின் தயாரிப்பாளர்கள்

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் என்றால் அது விஜய்தான் என பலரும் கூறி வருகின்றனர். அவரை வைத்துதான் தமிழ் சினிமா வியாபாரமே நடைபெற்று வருகிறது. படத்துக்கு படம் விஜய்யின் வியாபாரமும் வசூலும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.

மாஸ்டர் படம் வசூல் செய்யுமா? செய்யாதா? என ஏகப்பட்ட கேள்விகள் இருந்த நிலையில் அசால்டாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக பீஸ்ட் படம் எதிர்பார்த்ததற்கும் மேல் வசூல் செய்யும் என கூறுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க விஜய்யின் தளபதி 66, தளபதி 67 போன்ற இரண்டு படங்களையுமே தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். விஜய்க்கு தமிழ் சினிமா மார்க்கெட் மட்டும் பத்தாது எனவும், அவரை இந்திய அளவில் ஒரு முன்னணி ஹீரோவாக்க அவர் பாடுபட்டு வருகிறாராம்.

vijay-cinemapettai
vijay-cinemapettai

ஜெகதீஷ் மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் நட்பும் வைத்திருக்கிறாராம் விஜய். இதன் காரணமாகவே விஜய்க்கு பெரிய அளவு ஏதாவது செய்ய வேண்டுமென ஜெகதீஷ் தொடர்ந்து மற்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் தமிழ் தயாரிப்பாளர்கள் விஜய் மீது கொஞ்சம் அப்செட்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் டாப் தயாரிப்பு நிறுவனங்களாக இருப்பது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ். இதில் தளபதி 66 படத்தை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ என்பவருக்கு கொடுத்து விட்டாராம் விஜய். இந்த நேரத்தில்தான் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை அல்லு அரவிந்த் விஜய் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார்.

இந்த படம் தளபதி 67 படமாக இருக்க வாய்ப்பிருக்கிறதாம். இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இந்திய அளவில் விஜய்க்கு மிகப்பெரிய மார்கெட் உருவாகும் என கூறுகின்றனர். கடந்த சில வருடங்களாக தெலுங்கு சினிமாவில் விஜய்யின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்