16 வயதில் விபரீதத்தை தேடிய மீரா, மன அழுத்தம் வர என்ன காரணம்.? ஆதாரத்தோடு பயத்தை காட்டிய மனநல மருத்துவர்

Vijay Antony: உலகத்திலேயே பெரிய கொடுமை பெத்த பிள்ளையை சடலமாக பார்ப்பது தான். அப்படி ஒரு துயரம் விஜய் ஆண்டனிக்கு வந்திருக்கவே வேண்டாம். நேற்று அவருடைய மகளின் இறப்பு செய்தியை கேட்ட பலரும் இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

சிறு குழந்தை இப்படி ஒரு முடிவை தேட வேண்டிய அவசியம் என்ன என ஆதங்கத்தோடு பேசினாலும் மீராவின் மரணம் பல பெற்றோர்களையும் கதிகலங்க வைத்திருக்கிறது. ஏனென்றால் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தத்தால் தான் இப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் பரபரப்பை கிளம்பி வருகிறது.

Also read: விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த திரையுலகம்

அந்த வகையில் மனநல மருத்துவர் ஒருவர் இந்த பிரச்சனைக்கான காரணங்களை ஆதாரத்தோடு கூறியிருக்கிறார். அதாவது தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஒரு பெண் தனக்கு காதில் ஒரு குரல் கேட்பதாக கூறியிருக்கிறார். பல நேரங்களில் அந்த குரல் தான் தனக்கு துணை என்றும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அந்த சிறுமியின் பெற்றோர் பிசியாக இருந்தது தான். தனிமையில் தவித்து போன அந்த சிறு பெண்ணுக்கு இப்படி ஒரு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதை பற்றி கூறிய மருத்துவர் இந்த பிரச்சனை 6 வயதிலும் வரலாம் 60 வயதிலும் வரலாம். குழந்தைகளை பொருத்தவரை இதை வெளியில் சொல்ல தெரியாது.

Also read: மீரா எப்படிப்பட்ட பொண்ணு தெரியுமா.? உருகும் நட்பு வட்டாரம், விஜய் ஆண்டனிக்கு தீரா வேதனையை கொடுத்த மகள்

நாம் தான் அவர்களுடைய நடவடிக்கைகளை பார்த்து கண்டுபிடிக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக அவர்கள் யாரிடமும் பேசாமல் ஒதுங்கி இருப்பது, திடீரென அழுவது, தூங்காமல் இருப்பது போன்று தெரிந்தால் உடனே அவர்களை சரி செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் தனிமையில் விடக்கூடாது என்று கூறியுள்ளார்.

இப்படி ஒரு பிரச்சனையை தான் மீராவும் சந்தித்ததாக கூறப்படுகிறது. தற்போது வெளிவந்த தகவலின் படி போலீசார் அவருடைய வாட்ஸ் அப் தகவல்களை கைப்பற்றி இருக்கின்றனர். அதில் அவர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாக இரண்டு மனநல மருத்துவர்களிடம் சாட் செய்திருக்கிறார். அதில் தனக்கு கடுமையான மன அழுத்தம் இருப்பதாக கூறியிருக்கிறார்.

Also read: விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

அதனால் அவருக்கு 24 மற்றும் 29 தேதிகளில் அப்பாயின்மென்ட்டும் கிடைத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் இப்படி ஒரு முடிவை தேடி இருக்கிறார். தனக்கு பிரச்சினை இருப்பதை தெரிந்து கொண்டு மருத்துவரை நாடும் அளவுக்கு முதிர்ச்சியோடு இருந்த மீரா பெற்றோர்களிடம் இதை சொல்லாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அனைத்தும் கை மீறிய நிலையில் அவருடைய மரணம் பல பெற்றோர்களுக்கும் பயத்தை காட்டி விட்டது என்பது மட்டும் உண்மை.