Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த திரையுலகம்

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

vijay-antony-actor

Vijay Antony: திரையுலகில் இருந்து அடுத்தடுத்து வெளிவரும் மரண செய்திகள் கடும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதிலிருந்தே யாரும் மீண்டு வராத நிலையில் மற்றுமொரு சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உச்சகட்ட பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: திகிலூட்டும் மர்மம், விஜய் ஆண்டனியின் படம் கொலையா இல்ல தற்கொலையா? படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

16 வயதே ஆன மீரா பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாகவே தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை அடுத்து இன்று காலை 3 மணி அளவில் அவர் தன்னுடைய துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

உடனே பதறிப்போன குடும்பத்தினர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து போயிருக்கிறது.

Also read: பல கோடியில் புரளும் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு.. கைவசம் இத்தனை கார்களா?

இந்த விஷயம் தற்போது மீடியாவில் பரவியதை அடுத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் காவல்துறையும் இந்த மரணம் தொடர்பான முதல் கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் தான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்தார்.

அதை தொடர்ந்து தற்போது இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. என்னதான் ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் அவருடைய துயரத்தை போக்க முடியாது. இருப்பினும் விஜய் ஆண்டனி மற்றும் அவருடைய குடும்பம் இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கான தைரியத்தை கடவுள் கொடுக்க வேண்டும்.

Also read: என்னையும் ஏஆர் ரகுமானையும் தொடர்பு படுத்திய பொய்யான வதந்தி.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி

Continue Reading
To Top