வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விக்னேஷ் சிவனை சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்சனை.. இதுக்கு அஜித்தே பரவாயில்ல

Vignesh Shivan: விக்னேஷ் சிவன் ஓரளவு நடுத்தரமான நல்ல படங்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் விக்னேஷ் சிவன் உச்சி குளிர்ந்து போயிருந்த நிலையில் திடீரென அவரது கனவு பொய்த்து போய்விட்டது.

அதாவது லைக்காவுக்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காத காரணத்தினால் அவரை தூக்கி விட்டு மகிழ்த்திருமேனியை லாக் செய்து இருந்தனர். அப்போதும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தான் ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த சூழலில் அஜித் கைவிட்டு நிலையில் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார். அந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஆனால் பிரதீப் இப்போது விக்னேஷ் சிவனுக்கு டார்ச்சர் கொடுத்து கொண்டிருக்கிறார். அதாவது ஒரு வருடமாக அவரை காக்க வைத்துக் கொண்டிருக்கிறாராம்.

Also Read : விக்னேஷ் சிவனின் வரிகளில் ஹிட்டான 6 பாடல்கள்.. நயன்தாராவுக்காகவே உருகி எழுதிய சாங்

நாம் பண்ணுகின்ற படம் நன்றாக வரவேண்டும் என சொல்லி விக்னேஷ் சிவனை கேட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் எந்த படமும் எடுக்காமல் இருக்கிறார். இப்போது அஜித்தே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு வைத்துள்ளார் பிரதீப்.

இது தவிர பிரதீப் இவ்வளவு பிரபலமாக காரணமாக இருந்தது ஏஜிஎஸ் நிறுவனம் தான். பல நிறுவனத்திற்கு அவர் ஏறி இறங்கிய நிலையில் லவ் டுடே படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் நம்பி தயாரித்திருந்தது. ஆகையால் பிரதீப் இந்த நிறுவனத்திற்கு இன்னொரு படம் பண்ணி தருவதாக கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவனிடம் எப்படி நேரத்தை கடத்தி வருகிறாரோ அதேபோல் தான் ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். மேலும் இப்படியே போனால் பிரதீப்பை மறந்து விடுவார்கள் என்ற நிலைதான் இருக்கிறது. விக்னேஷ் சிவனும் இப்போது செய்வதறியாமல் உள்ளார்.

Also Read : ஆசை காட்டி மோசம் செய்யும் அஜித்.. விக்னேஷ் சிவன் லிஸ்டில் இணையும் இயக்குனர்

- Advertisement -

Trending News