விக்னேஷ் சிவனின் வரிகளில் ஹிட்டான 6 பாடல்கள்.. நயன்தாராவுக்காகவே உருகி எழுதிய சாங்

Vignesh Shivan Lyrics: விக்னேஷ் சிவன் ஒரு இயக்குனராக ஜெயிக்க போராடிக் கொண்டிருந்தாலும், நல்ல பாடலாசிரியராக வென்றிருக்கிறார். இவருடைய பாடல் வரிகள் இவரை மக்களிடையே சிறந்த படைப்பாளியாக கொண்டு சேர்த்து விட்டது. இவர் நிறைய பாடல்கள் எழுதி இருந்தாலும் இந்த ஆறு பாடல்கள் அட விக்னேஷ் சிவனா இதை எழுதியது என்று கேட்பவர்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல்கள் எப்போதுமே இசை ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்டில் இருக்கும்.

அத்தாரு அத்தாரு: நடிகர் அஜித்குமாருக்காக விக்னேஷ் சிவன் எழுதிய அத்தாரு அத்தாரு பாடல் தான் முதன் முதலில் அவரை ஒரு பாடலாசிரியராக சினிமா உலகில் கவனிக்க தொடங்கியதற்கு காரணமாக இருந்தது. அதிலும் எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும், பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும் போன்ற பாடல் வரிகள் கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக இருந்தது. படம் ரிலீஸ் ஆன சமயத்தில் இந்த பாடலுக்கு திரையரங்கமே அதிர்ந்தது.

Also Read:இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. கூட்டணியை வித்தியாசமாக உறுதி செய்த பிரதீப்-விக்கி

தங்கமே: விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் உலகின் தேசிய கீதம் என்று கூட இந்த பாடலை சொல்லலாம். இந்தப் பாடலின் மூலம்தான் விக்கி தன் காதலை நயன்தாராவிடம் சொல்லி இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த படத்தில் வரும் கண்ணான கண்ணே கலங்காதடி, என்னை மாற்றும் காதலே போன்ற பாடல்கள் கூட இவர் எழுதியது தான். இன்று வரை இது ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கிறது.

அம்மா என் முகவரி நீயம்மா: தமிழ் சினிமாவில் அம்மா சென்டிமென்ட் பாடல்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். ரஜினி, கமல், விஜய் போன்ற ஹீரோக்களுக்கு இந்த அம்மா சென்டிமென்ட் பாடல்கள் இருக்கும்பொழுது, அஜித்துக்கு மட்டும் இல்லையே என்ற குறையை போக்கிய பாடல் தான் அம்மா என் முதல் வரி நீயம்மா. இது பலரின் ரிங்டோனாக இன்று வரை இருக்கிறது.

நான் பிழை: விக்னேஷ் சிவனின் சமீபத்திய ரிலீசான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தாலும், நான் பிழை பாடல் மனதை வருடும் விதமாக அமைந்தது. மேலும் அதில் வரும் டிப்பம் டிப்பம் சாங் சமந்தாவுக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. இந்த இரண்டு பாடல்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read:ஒருவேளை விடாமுயற்சி அவர் விட்ட சாபமா இருக்குமோ!. அடுத்த கூட்டணியுடன் சூட்டிங்க்கு தயாரான விக்கி

ரத்தமாறே: ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் தான் ரத்தமாறே. இந்த பாடலை தன் இரு மகன்கள் ஆன உயிர் மற்றும் உலகை மனதில் வைத்து எழுதியதாக விக்னேஷ் சிவன் சொல்லி இருந்தார். இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் கேட்பவர்களை கலங்கடிக்கும் விதமாக இருக்கிறது.

பீலா பீலா: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இதில் பீலா பீலா என்னும் பாடலை விக்னேஷ் எழுதியிருந்தார். இந்த பாடல் அப்போது பெரிதாக கவனிக்கப்படவில்லை, தற்போது நிர்மா சுந்தரியே,பாப்பின்ஸ் பல் அழகே, உஜாலா இடுப்பதான் உலுக்குறியே, லைப் பாய் ஆரோக்கியமே, பூஸ்ட்டு எனர்ஜியே போன்ற வரிகள் 90ஸ் கிட்ஸ்க்களால் கவனிக்கப்பட்டு தற்போது பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது.

Also Read:நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய த்ரிஷா.. குருவி ஒக்கார பனம்பழம் விழுந்த கதையாய் ஏறிய மார்க்கெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்