மனோஜை வசமாக சிக்க வைத்த முத்துவின் வீடியோ.. தொங்கி போன விஜயா முகம், அவமானத்தில் நிற்கும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் கவரிங் நகைக்கு பின்னாடி மனோஜ் மற்றும் விஜயாவின் தில்லாலங்கடி வேலை இருக்கிறது என்பது முத்துவுக்கு தெரிந்து விட்டது. அதனால் இவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று சுருதி மூலம் மனோஜ் வாயால் உண்மையை வரவழைக்க ப்ளான் பண்ணினார். ஆனால் அப்பொழுது மனோஜ் உஷார் ஆகிவிட்டார்.

பிறகு விஜயாவின் தோழி பார்வதி மூலம் ஏதாவது உண்மை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்வதற்காக முத்து மீனாவும் பார்வதி வீட்டிற்கு போய் எதார்த்தமாக பேசி வாயில் இருந்து உண்மையை வர வைக்க முடிவு பண்ணினார்கள். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது பார்வதி உண்மையை சொல்ல வரும் பொழுது சரியாக அங்கே நுழைந்த விஜயா எதுவும் சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார்.

மனோஜ் வைத்து ரோகிணியை அசிங்கப்படுத்திய முத்து

இந்த சூழ்நிலையில் முத்து மற்றும் மீனா அடுத்து என்ன பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்துவின் நண்பர் போன் பண்ணி ஒரு ஷோரூமில் பொருட்கள் அனைத்தும் குறைந்த ரேட்டில் கிடைக்கிறது பார்க்கலாம் என்று கூப்பிடுகிறார். ஆரம்பத்தில் போவதற்கு மறுத்த முத்துவை வலுக்கட்டாயமாக மீனா அனுப்பி வைக்கிறார்.

அப்படி அந்த ஷோரூமுக்கு முத்து மற்றும் நண்பர் போயி பொருட்களை வாங்க முயற்சி எடுக்கும் பொழுது போலீசார் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். அதாவது அந்த ஷோரூம் மற்ற பெரிய கடைகளில் ஏமாற்றி வாங்கிய பொருட்கள் என்று முத்துக்கு தெரிய வருகிறது. இதனால் அந்த கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் விசாரிப்பதற்காக கூட்டிட்டு போகிறார்கள்.

அப்பொழுது முத்து மற்றும் நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். உடனே இவர்கள் அனைவரையும் லாக்கப்பில் போட்டு விடுகிறார்கள். அந்த நேரத்தில் போலீஸ், மனோஜ்க்கு போன் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்த உண்மைகளை எதார்த்தமாக உளறிவிட்டு என் மனைவியிடம் இருந்து நான் தப்பித்துக் கொள்வதற்காக நஷ்டத்தை சரி செய்வதற்காக குடும்பத்தில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.

இதே லாக்கப்பில் இருந்து கொண்டு முத்து மொபைல் மூலம் வீடியோவை எடுத்து விடுகிறார். அதன் பின் வெளியே போன முத்து நேராக வீட்டிற்கு போயிட்டு ரோகிணியை நான்கு கேள்வி நறுக்குன்னு கேட்கிறார். அதாவது என்னமோ அன்னைக்கு என் புருஷன் மனோஜ் பிசினஸ்மேன், அவருக்கு எப்படி லாபத்தை சம்பாதிக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு லட்ச ரூபாயை லாபகரமாக விற்பனை செய்திருக்கிறார் என்று ஓவராக அலட்டி பார்லர் அம்மா என்று முத்து நக்கல் அடித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து அந்த லாபம் மற்றும் மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலை என்னவென்று தெரியுமா என சொல்லி கையில் இருந்த வீடியோவை அனைவரது முன்னிலையில் டிவியில் போட்டு காமிக்கிறார்.

உடனே விஜயா மற்றும் மனோஜ் திருட்டு முழி முழித்துக் கொண்டு நிற்கிறார்கள். அந்த வகையில் கையும் களவுமாக மாட்டிய இவர்களை அண்ணாமலை வெளுத்து வாங்கப் போகிறார். அது மட்டுமில்லாமல் இவ்வளவு நாள் ஓவராக ஆட்டம் போட்ட ரோகிணிக்கும் இது பெரிய அவமானமாக போய்விட்டது. இப்பொழுது தான் இந்த நாடகம் பார்ப்பதற்கு குளுகுளு என்று இருப்பது போல் ஒவ்வொரு காட்சிகளும் ஆனந்தமாக இருக்கிறது. இதே மாதிரி அடுத்தடுத்து ரோகிணியும் மாட்ட போகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -