மீனா கொடுத்த ஐடியா, சுருதியை வைத்து மனோஜிடம் உண்மையை வாங்கிய முத்து.. ரோகிணி புருஷனுக்கு விழும் அடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பாட்டியின் 80வது பிறந்த நாள் நல்லபடியாக முடிந்து விட்டது. அதே மாதிரி பாட்டி கொடுக்க நினைத்த பாரம்பரியமான சிறப்பு பரிசு முத்து மீனா அவர்களுக்கு கிடைத்துவிட்டது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத விஜயா மனோஜ்க்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பாட்டியை ஊருக்கு அனுப்பி வைக்க முத்து காரில் கூட்டிப் போய் பஸ் ஏத்தி விடுகிறார்.

பிறகு முத்து, பாட்டியை அனுப்பிவிட்டு வீட்டிற்கு கோபமாக வருகிறார். வந்ததும் வீட்டு கதவை சாத்தி அனைவரையும் ஒரே இடத்தில் நிற்க சொல்கிறார். அப்பொழுது மீனாவை நகையை எடுத்துட்டு வர சொல்கிறார். மீனா நகை எடுத்துட்டு வந்து முத்து கையில் கொடுக்கிறார். அப்பொழுது முத்து அந்த நகையை அனைத்தையும் அண்ணாமலையிடம் கொடுத்து இதை கடையில் கொடுத்து பாட்டிக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று போனோம்.

முத்துக்கு உதவியாக நிற்கும் சுருதி

ஆனால் போன இடத்தில் இது அனைத்தும் கவரிங் நகை என்று கடைக்காரர் சொல்லிவிட்டார். எனக்கு வந்த கோபத்துக்கு வீட்டில் வந்து உடனே கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி கேட்டா பாட்டி பிறந்த நாள் சந்தோசமாக முடிந்திருக்காது என்பதற்காக அமைதியாக நாங்கள் இருந்தோம். அதனால் எனக்கு இப்பொழுது இது எப்படி கவரிங் நகையாக மாறிச்சு என்று தெரிந்தாக வேண்டும் என்று முத்து கேட்கிறார்.

இது எதுவும் புரியாத அண்ணாமலை, நகையை பார்த்து ஆமாம் பார்ப்பதற்கு கவரிங் நகை மாதிரி தான் இருக்கிறது. இது எப்படி வந்தது என்று விஜயாவிடம் கேட்கிறார். விஜயா எதுவுமே நடக்காத போல் எனக்கு எப்படி தெரியும். அவர்கள் கொடுத்த நகை தான் நான் பத்திரமாக வைத்திருந்தேன். ஒருவேளை மீனா வீட்டில் கவரிங் நகை போட்டு தான் அனுப்பி வைத்திருப்பார்களோ என்னமோ என்று மொத்த பழியையும் மீனா குடும்பத்தின் மீது வாய் கூசாமல் போடுகிறார்.

இதை கேட்டதும் மீனா தேவையில்லாமல் என் குடும்பத்தை பற்றி தவறாக பேச வேண்டாம். எங்க வீட்டில் தங்க நகை தான் போட்டாங்க. இங்கே வந்த பிறகுதான் கவரிங் நகையாக மாறிடுச்சு என்று சொல்கிறார். உடனே விஜயா நான் தான் கவரிங் நகையை மாற்றிக் கொடுத்தன என்று குதர்க்கமாக பேசுகிறார். அப்பொழுது சுருதி போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்கிறார்.

ஆனால் முத்து அதெல்லாம் வேண்டாம், இன்று சாயங்காலம் வரை டைம் கொடுக்கிறேன். அதற்குள் எப்படி கவரிங் நகை வந்துச்சு என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு முத்து மீனாவும், மனோஜ் மீது தான் சந்தேகம் பட்டு பேசுகிறார்கள். அப்பொழுது முத்து, இந்த மனோஜ் தான் இதே மாதிரி பண்ணி இருப்பான். அதனால் அவன் வாயிலிருந்தே உண்மையை வர வைக்கணும் என்று சொல்கிறார்.

உடனே மீனா, நாம் ஸ்ருதியை வைத்து வேற ஒருவர் மாதிரி பேச சொல்லி மனோஜிடம் உண்மையை வாங்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அதன்படி ரவிக்கு போன் பண்ணி சுருதி ஆபீஸ்க்கு வர சொல்கிறார். அங்கே முத்துவும் மீனாவும் போய்விடுகிறார்கள். போனதும் சுருதியிடம் விபரத்தை சொல்லி, வேற குரலில் மனோஜிடம் பேச வைக்கிறார்கள்.

அதில் சுருதி சொல்வது என்னவென்றால், நீங்கள் என்னிடம் கவரிங் நகை வாங்கிட்டு போனீர்களா அந்த நகை உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா என்று போட்டு வாங்குகிறார்கள். ஆரம்பத்தில் மனோஜ் இல்லை என்று மறுத்தாலும் போகப்போக சுருதி சில விஷயங்களை சொல்லி மனோஜ் ஆமாம் என்று சொல்லும் அளவிற்கு உண்மையை உளறி விட்டார்.

பிறகு மனோஜ் தான் எல்லாத்துக்கும் காரணம் என்பது தெரிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு இந்த பஞ்சாயத்து போகிறது. போனதும் முத்து, மனோஜ்க்கு தர்ம அடி கொடுக்கப் போகிறார். ஆனால் இதில் விஜயாவும் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கப் போகிறது. முத்துவுக்கு ஒரு பிசினஸில் நஷ்டம் என்றால் எப்படி மீனாவின் நகையை கொடுக்கலாம் என்ற கேள்வி அண்ணாமலை வைக்கப் போகிறார்.

இதனால் அனைவரது முன்னாடியும் விஜயா, ரோகினி மற்றும் மனோஜ் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்கள். இந்த அவமானத்தை தாங்க முடியாத ரோகினி, மனோஜிடம் இந்த விஷயத்தில் ஏன் என்னிடம் மறைத்தாய் என்று சண்டை போட போகிறாய். ஆக மொத்தத்தில் இந்த மூன்று பேரும் செய்யும் தில்லாலங்கடி மொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -