விஜயாவை மடக்கி பிடித்த முத்து.. பயத்தில் உண்மை உளறிய மனோஜ், ரோகிணியை அசிங்கப்படுத்திய மீனா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் பாட்டி பிறந்தநாள் நல்லபடியாக முடிந்து விட்டது. பாட்டி ஊருக்கு போன நிலையில் முத்து கையில் இருக்கும் கவரிங் நகையை எடுத்துட்டு வீட்டிற்கு வருகிறார். வந்ததும் யாரும் வெளியே போகக்கூடாது என்று வீட்டு கதவை அடைக்கிறார். அப்பொழுது மனோஜ் என்னடா நான் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா?

உன்னை மாதிரி என்னால வீட்டுல நேரத்தை வேஸ்ட் பண்ண முடியாது என்று சொல்கிறார். அதற்கு கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொல்லி அண்ணாமலையை முத்து கூப்பிடுகிறார். அப்பொழுது முத்து கையில் இருந்த நகை அனைத்தையும் கீழே வைத்து இதை எடுத்துட்டு பாட்டிக்காக ஒரு செயின் வாங்குவதற்காக நானும் மீனாவும் கடைக்கு போனோம்.

முத்துவிடம் சிக்கிய விஜயா மனோஜ்

ஆனால் அங்க போய் பார்த்தால் இது அனைத்தும் கவரிங் நகை என்று சொல்லிவிட்டார்கள். எப்படி நான் கொடுத்த நகை கவரிங் நகையாக மாறுச்சு என்று எனக்கு இப்பொழுது தெரிந்தாக வேண்டும் என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை அந்த நகையை பார்த்த பின்பு, இது எப்படி கவரிங் நகையாக மாறுச்சு என்று விஜயாவிடம் கேட்கிறார்.

அதற்கு விஜயா எனக்கு எப்படி தெரியும். மீனா கொடுத்த நகை அப்படியே நான் வாங்கி உள்ளே வைத்திருந்தேன். திருப்பி கேட்டதும் அதை நான் கொடுத்து விட்டேன். ஒருவேளை மீனா வீட்டில் இந்த கவரிங் நகை தான் கொடுத்து இருப்பார்களோ என்னமோ, எனக்கு எப்படி தெரியும் என்று குதர்க்கமாக பதில் சொல்கிறார்.

இதை கேட்டு ஆவேசமான மீனா, தேவையில்லாமல் என் குடும்பத்தை பற்றி தவறாக பேசாதீர்கள். எங்கள் குடும்பத்தில் இந்த மாதிரி ஏமாற்றும் பழக்கம் கிடையாது என்று சொல்கிறார். அப்பொழுது முத்து, மீனா மீது பழியை போடுவதை நிறுத்திவிட்டு இது எப்படி கவரிங் நகை ஆச்சு என்று எனக்கு இப்பொழுது தெரிய வேண்டும் என்று கேட்கிறார்.

உடனே ஸ்ருதி, போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து இதைப்பற்றி விசாரிக்க சொல்லலாம் என பாய்ண்ட் எடுத்து கொடுக்கிறார். சுருதி சொன்னதும் போலீஸ் என்ற பெயரை கேட்டதும் விஜயா மற்றும் மனோஜ் திருட்டு முழி முழிக்கிறார்கள். எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் விஜயாவிற்கு வந்துவிட்டது. அதிலும் போலீஸ் என்ற பெயர் கேட்டதும் மனோஜ் தொடை நடுங்கி போய்விட்டார்.

அப்போது பயத்தில் மனோஜ் சில விஷயங்களை உளறுகிறார். தொடர்ந்து முத்து கேள்வி கேட்க விஜயாவும் மாட்டிக் கொள்கிறார். ஆக மொத்தத்தில் இந்த கவரிங் நகை விஷயத்தில் விஜயாவும் மனோஜ் கையும் களவுமாக சிக்கப் போகிறார்கள். இது எதுவும் தெரியாத ரோகிணி, மனோஜ் உண்மையிலேயே ஒரு பிஸ்னஸ் மேன் கை நிறைய லாபத்தை சம்பாதிக்கிறார் என்று ஓவராக ஆட்டம் போட்டார்.

தற்போது எல்லாத்துக்கும் முடிவு கட்டும் விதமாக மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலை அனைத்தும் அம்பலமாக போகிறது. இதற்கு உடந்தையாக இருந்த விஜயாவும் கையும் களவுமாக பிடிபட போகிறார். எந்த குடும்பத்தின் முன் மனோஜை ஓவராக புகழ்ந்தாரோ, அதே குடும்பத்தின் முன் ரோகிணி தற்போது அவமானப்படும் அளவிற்கு சம்பவம் நடக்கப் போகிறது.

ஆனால் எப்பொழுதுமே இந்த ரோகிணி விஷயங்கள் மட்டும் வெளியே வராமல் கமுக்கமாக மறைந்து விடுகிறார். எவ்வளவோ விஷயங்களில் பொய் பித்தலாட்டம் பண்ணிய ரோகிணி பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -