சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்று கூறி வருகின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவந்துள்ள இப்படம் பழைய படங்களான பாட்ஷா, நாயகன் போன்ற படங்களை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Also read: ஒரிஜினல் ரன்னிங் டைம் இவ்வளவா.? வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பக்கா பிளான்
வழக்கமாக ஏதாவது ஒரு விஷயத்தால் பாதிக்கப்படும் ஹீரோ அதிரடி ஆக்சனுக்கு மாறுவதை தான் இந்த படத்திலும் காட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் சில இடங்களில் கௌதம் மேனன் சொதப்பி இருக்கிறார். அதாவது படம் முழுக்க க்ரைம் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் போலீசை பார்க்க முடிவதில்லை.

அதே போன்று ஹீரோ திடீரென்று பெரிய தாதாவின் பாடிகார்டாக மாறுவது எப்படி போன்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது. இதற்கு இயக்குனர் இன்னும் சற்று விளக்கம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் சண்டைக் காட்சிகளும் அழுத்தமாக மனதில் பதியவில்லை.
Also read: வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்
பொதுவாக கேங்ஸ்டர் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அது இப்படத்தில் கொஞ்சம் மிஸ் ஆகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் படம் முழுவதையும் சிம்பு தான் தாங்கிப் பிடிப்பதோர் பிரம்மை தோன்றுகிறது. இதுவும் படத்திற்கு ஒரு மைனஸ் ஆக இருக்கிறது.
மேலும் கதையின் ஓட்டம் வேகமாக இருப்பதும் ஆடியன்ஸை குழப்பம் அடைய வைக்கிறது. அதாவது திடீரென்று நெல்லை தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகள் மாறி மாறி பேசும் போது பார்ப்பவர்களுக்கு அதை பின்பற்றுவது சற்று சிரமத்தை கொடுக்கிறது. இது போன்ற சில விஷயங்கள் நெருடலை கொடுப்பதாக ரசிகர்கள் தற்போது படம் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Also read: GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்