தோல்வி பயத்தை மறைமுகமாக காட்டிய வலிமை, கோப்ரா.. வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பிளான்

மாநாடு படத்திற்குப் பிறகு சிம்பு ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம் இன்று ரிலீசான வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் வெற்றிக்காகவே படத்தின் ஒரிஜினல் ரன்னிங் டைமிங்கை குறைத்து படத்தை ட்ரிம் செய்துள்ளனர். தொடக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடம். அதன் பிறகு படத்தை ட்ரிம் செய்து 2 மணிநேரம் 53  நிமிடங்களாக குறைத்தனர். ஏனென்றால் படம் நீளமாக இருந்தால் ரசிகர்களை நிச்சயம் சலிப்படையச் செய்யும்.

Also Read: சிம்புவின் மாஸ் எல்லாம் கிடையாது.. இது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை

அதை அறிந்து கொண்ட படக்குழு படத்தில் தேவையில்லாத அத்தியாவசியமற்ற காட்சிகளை நீக்கி நேரத்தை குறைத்துக் கொடுத்துள்ளனர். இதனால் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை சிம்பு ரசிகர்கள் தற்போது திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் இந்த படத்தை குறித்து குவிவதால் நிச்சயம் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்புவின் முத்து கதாபாத்திரம் வெறித்தனமாக இருந்தது என்றும் கேம்ஸ்டர் படமான இந்தப்படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கடைசி 20 நிமிடம் அருமையாக இருந்தது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also Read: GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இதில் சிம்பு 21 வயது இளைஞராக மாறி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காகவே அதை திரையரங்கிற்கு வர வைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படத்திற்கு பிறகு ஏஆர் ரகுமான் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இவ்வாறு படத்தின் வெற்றிக்காகவே படக்குழு படத்தினுடைய நேரத்தைக் குறைத்து ட்ரிம் செய்யும் வித்தைகளை கையாண்டு ரசிகர்களை தொடர்ந்து திரையரங்கில் குவிய வைத்துள்ளனர். ரன்னிங் டைம் ஜாஸ்தியா இருந்த வலிமை, கோப்ரா விமர்சன ரீதியாக சறுக்கல்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: வெந்து தணிந்தது காடு 5 மணி ஷோ பாக்க போறீங்களா.? பயமுறுத்தி அறிக்கை வெளியிட்ட கவுதம் மேனன்

- Advertisement -spot_img

Trending News