வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வனிதாவின் எக்ஸ் கணவர் உயிரிழப்பு.. காரணம் கேட்டு அதிர்ச்சியில் திரையுலகம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். இவருடைய சகோதரர் தான் நடிகர் அருண் விஜய். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் இப்போது ஷாப்பிங் கடையையும் திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் சொந்த வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகள் நிறைந்துள்ளது. முதல் இரண்டு திருமணங்கள் வனிதா விஜயகுமாருக்கு தோல்வியில் முடிய டான்ஸ் மாஸ்டரான ராபர்ட் மாஸ்டர் உடன் பழகி வந்தார்.

Also Read : பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்.. மீண்டும் பத்த வச்ச வத்திக்குச்சி

ஆனால் இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட பாதியிலேயே இந்த ரிலேஷன்ஷிப் முடிவு பெற்றது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் வனிதா விஜயகுமார் யூடியூப் சேனல் தொடங்கியிருந்த நிலையில் கோவிட் காரணமாக வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருந்தது.

அப்போது தான் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனராக இருந்த பீட்டர் பால் வனிதாவுக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த பழக்கத்தின் காரணமாக வனிதா விஜயகுமார் கிறிஸ்துவ முறையில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இணையத்தில் பூதாகரமாக வெடிக்க தொடங்கிய நிலையில் சில மாதங்களிலேயே வனிதா பீட்டர் பாலை பிரிந்து விட்டார்.

Also Read : புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா.. ஜீன்ஸ், பாப்கட் என ஆளே மாறிய புகைப்படம்

அதாவது வனிதா திருமணம் செய்து கொண்ட போதே பீட்டர் பாலின் முதல் மனைவி பிரச்சனை செய்து வந்தார். இதனால் வனிதா கோர்ட், கேஸ் என அலைந்தார். மேலும் தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவுக்கு எதிராக தொடர்ந்து யூடியூப் சேனலில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் பீட்டர் பாலின் சுயரூபம் அறிந்து வனிதாவே அவரை ஒதுக்கி வைத்து விட்டார்.

ஏனென்றால் அளவுக்கு அதிகமாக பீட்டர் பால் மது அருந்துவதாக வனிதாவை கூறியிருந்தார். இந்நிலையில் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் உள்ள பிரபலங்களுக்கு தெரிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read : இது கோழியா? இல்ல காக்காவா? KFC-யுடன் மல்லுக்கு நிற்கும் வத்திக்குச்சி வனிதா

- Advertisement -

Trending News