1.5 மதிப்பெண் கொடுத்து வெறுப்பேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. நானும் உங்க இடத்திற்கு வருவேன், ஆக்ரோஷப்பட்ட வனிதா!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இருப்பவர் வனிதா விஜயகுமார். தற்போது இவர் ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வனிதா பொறுத்தவரை எப்போதுமே மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடிய பெண்மணி என்பது அனைவருக்கும் தெரியும்.

அதாவது வனிதா டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கூட இவர் தனது யாருக்காகவும் நடிக்காமல் எப்படி இருப்பாரோ அதே போலவே இருந்தார் இதன் மூலம் ஒரு சில வெறுப்புகளையும் சந்தித்தார்.

அதன்பிறகு பிக்பாஸ் ஜோடிகள் எனும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு குழுவாக இணைந்து தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.

இதில் வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஆடினர் இதில் ஒரு சில வேறுபாடுகள் ஏற்பட்டதால் நடன நிகழ்ச்சியில் இருவரும் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இந்த நடனத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு 1.5 மதிப்பெண் கொடுத்தார்.

மேலும் மற்ற நடனமாடிவர்களிடம் ஒப்பீட்டு பேசியதால் வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதற்கு வனிதா விஜயகுமார் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் நான் ஒரு உண்மையான மனிதர் என் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறி விடுவேன்.

ramya-krishnan-vanitha
ramya-krishnan-vanitha

அது யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை திறமையை மதியுங்கள் ஒருநாள் உங்கள் இடத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது என கூறியுள்ளார். தற்போது இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் வனிதா விஜயகுமார் ஆதரவாக கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்