Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீ எல்லாம் பொம்பளையா என கேட்ட ரசிகர்.. அதற்கு வனிதா கொடுத்த பதிலடி என்னனு பாருங்க?

ஒரு சிலருக்கு சினிமா வாழ்க்கை கை கொடுக்கவில்லை என்றாலும் சொந்த வாழ்க்கையை நல்லபடியாக அமையும். சிலருக்கு சினிமா வாழ்க்கையை நன்றாக இருந்தால் சொந்த வாழ்க்கையில் பல நெருக்கடிகள் வரும்.
ஆனால் நம்ம வனிதாவுக்கு தான் சினிமாவும் சரியில்லை, சொந்த வாழ்க்கையும் சரியில்லை. தினமும் ஏதாவது ஒரு பிரச்சினையை பண்ணிக் கொண்டிருக்கிறார். வனிதா ஒரு விஷயம் செய்தால் தற்போதெல்லாம் பயங்கரமாக டிரெண்ட் ஆகி விடுகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வனிதா பைலட் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்று வந்ததாக ஒரு வதந்தி காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது.
இதற்கு உடனடியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வனிதா, எனக்கு இன்னும் திருமணமாகவில்லை எனவும், அயம் சிங்கிள் அண்டு அவைலபில் என்ற ஒரு பதிவை போட்டாலும் போட்டார். சமூக வலைதளமே பற்றிக் கொண்டது.
இன்னமும் வனிதாவுக்கு கல்யாண வெறி அடங்கவில்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கிழித்தெரிகின்றனர். அதில் ஒரு ரசிகர், நீ என்ன பொம்பள, வயதுக்கு வந்த இரண்டு மகள்கள் இருந்த போதும் இன்னும் உனக்கு கல்யாண வெறி அடங்கவில்லை, தயவு செய்து நிறுத்துங்கள், அசிங்கமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சும்மா விடுவாரா நம்ம வனிதா, பதிலுக்கு எனக்கு தேவைப்படும்போது நீங்களாக வந்து காப்பாற்ற போகிறீர்கள், உன்னோட வேலையை பாரு, நான் ஒரு நடிகை, என் நடிப்பு பிடித்திருந்தால் என் படத்தைப் பார், இல்லையென்றால் உன் குடும்பத்தை பார் என பதிலடி கொடுத்துள்ளார்.

vanirtha-vijayakumar-cinemapettai
