டபுள் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.. நம்ம தல சும்மா தெறிக்க விட போறாரு!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அப்டேட் குறித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அனைத்து பிரபலங்களிடமும் சமூகவலைதளங்களில் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

ஆனால், படக்குழு இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வகையில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அதன் மோஷன் போஸ்டர் ஆகிய இரண்டையும் இந்த மாதத்திற்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

valimai
valimai

முன்னதாக புக்மை ஷோ தளத்தில் வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்ததன் மூலம் பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

எது எப்படியோ சிங்கிள் அப்டேட்டுக்காக காத்துக்கிட்டிருந்த ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் கிடைக்க போவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்