இந்தியாவில் நம்பர் 1 சாதனை படைத்த வலிமை.. வெறியாட்டம் ஆடிய தல ரசிகர்கள்

தல அஜித் ரசிகர்களின் இரண்டு வருட தவத்திற்கு கிடைத்த வரமாக நேற்று வலிமை படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் அடங்கிய மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் கிடைத்ததை வைத்து சந்தோசப்படும் மனநிலைக்கு வந்த தல ரசிகர்கள் இணையத்தில் வலிமை படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

கடைசியாக உருவான தல அஜித்தின் படங்கள் சிலவற்றில் மோஷன் போஸ்டர் வெளியிடும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் இதற்கு முன்னர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் 5 லட்சத்து 51 ஆயிரம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தது.

ஆனால் நேற்று வெளியான வலிமை போஸ்டர் வெறும் 14 மணி நேரத்தில் 5 லட்சத்து 65,000 லைக்குகளை பெற்று விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் வெளியான மோஷன் போஸ்டர்களில் யூடியூப் தளத்தில் 14 மணி நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டர் ஆக மாறியுள்ளது வலிமை. இது தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

வலிமை படம் 2021 ஆம் ஆண்டு வெளியீடு என்பதை உறுதி செய்து விட்டனர். ஆனால் தியேட்டரா? அல்லது ஓடிடியா? என்பது வரும் காலங்களில் முடிவு செய்யப்படுமாம். மீதமிருந்த படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது வலிமை படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

valimai-cinemapettai-00
valimai-cinemapettai-00
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்