Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வம்படியாய் இழுத்து அசிங்கப்படுத்திய வடிவேலு.. விஜயகாந்த்தின் விசுவாசி என்பதால் செய்த ஏளனம்

vadivelu-vijayakanth

வடிவேலு சினிமாவில் நுழைய முக்கிய காரணம் விஜயகாந்த் தான். தன்னுடைய சொந்த ஊரான மதுரை சேர்ந்தவர் என்பதால் பல படங்களில் வடிவேலுவை விஜயகாந்த் சிபாரிசு செய்தார். ஒரு கட்டத்திற்கு மேல் வடிவேலு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து உயரத்தை அடைந்தார்.

அந்தச் சமயத்தில் விஜயகாந்த் மற்றும் வடிவேலு இடையே பிரச்சனை இருந்தது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் விஜயகாந்தின் விசுவாசி என்பதால் தன்னை கூப்பிட்டு வடிவேலு அசிங்கப்படுத்தி உள்ளதாக பேட்டி ஒன்றில் பிரபலம் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read :வடிவேலு விஷயத்தில் பெரிய மனுசனாக நடந்து கொண்ட விஜயகாந்த்.. கோர்த்து விடாமல் காப்பாற்றிய கேப்டன்

அதாவது 90களின் பிற்பகுதியில் விஜயகாந்த் உடன் தொடர்ந்து பயணித்தவர் மீசை ராஜேந்திரன். விஜயகாந்த் அரசியலுக்கு சென்றபோதும் அவருக்கு பக்கபலமாக இவர் இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மீசை ராஜேந்திரன் தன்னை வடிவேல அவமானப்படுத்தியதாக கூறிய இருந்தார்.

விஜயகாந்த், வடிவேலு சண்டைக்குப் பிறகு ஏவிஎம் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்த வடிவேலு அப்போது உடன் இருந்த மீசை ராஜேந்திரனை பார்த்து உள்ளார் . ஆரம்பத்தில் நன்றாக பேசிய வடிவேலு நாளை ஒரு ஷூட்டிங் இருக்கிறது இந்த நேரத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

Also Read :ஆணவத்தால் அழிந்த விஜயகாந்த்.. இப்ப இருக்கிற நிலைமைக்கு அவர்தான் காரணம்

இதற்காக மீசை ராஜேந்திரனும் காலை 7 மணிக்கே மேக்கப்புடன் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு பார்த்தால் வடிவேலுடன் பெசன்ட் ரவி நடித்துக் கொண்டிருந்தாராம். பிறகு நம்மை கூப்பிடுவார்கள் என பல மணி நேரம் மீசை ராஜேந்திரன் காத்துக்கொண்டிருந்தாராம்.

ஆனால் கடைசியில் அங்கிருந்த ஒரு நபர் வந்து நீங்கள் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் தான் தற்போது பெசன்ட் ரவி நடித்துக் கொண்டிருக்கிறார் என கூறினாராம். பின்பு வடிவேலிடம் போய் கேட்டதற்கு விஜயகாந்த் உடன் இருப்பவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்று ஏளனமாக பேசினாராம். பல வருடம் கழித்து ஒரு பேட்டியில் மீசை ராஜேந்திரன் இவ்வாறு நடந்ததாக கூறினார்.

Also Read :வடிவேலுவை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்.. இன்று வரை பேசப்படும் கேரக்டர்

Continue Reading
To Top