ஒரே மாதத்தில் இரண்டு 100 நாள் படம் கொடுத்த ஒரே இயக்குனர்.. மாஸ்!

இப்போதெல்லாம் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்தாலே அந்த நடிகர்களின் படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ஓடுவதில்லை. ஆனால் ஒரே மாதத்தில் இரண்டு படங்களை இரண்டு வார இடைவெளியில் ரிலீஸ் செய்து இரண்டு படங்களையும் 100 நாள் வெற்றிப்படமாக கொடுத்த ஒரே இயக்குனர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் பிரபலம் ஒருவர்.

அந்த காலகட்டங்களில் திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடிய படங்களும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரு வாரம் ஓடினாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.

அப்படி ஒவ்வொரு திரையரங்குகளிலும் பல நூறு நாள் வெற்றி படங்களை கொடுத்தவர்களில் முக்கியமானவர் விக்ரமன். இவருடைய சூரிய வம்சம், பூவே உனக்காக போன்ற படங்களெல்லாம் மாபெரும் வெற்றியை பெற்று பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

புது வசந்தம் என்ற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்ரமன் அதற்கு அடுத்து எடுத்த இரண்டாவது படமே தோல்வி படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வைராக்கியத்தில் எடுத்த படங்கள் தான் கோகுலம் மற்றும் நான் பேச நினைப்பதெல்லாம் என்ற இரண்டு படங்களும்.

1993ம் ஆண்டு வெளியானது. முதலில் கோகுலம் படமும் அடுத்த இரண்டு வாரம் கழித்து நான் பேச நினைப்பதெல்லாம் படமும் வெளியானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த இரண்டு படங்களுமே 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

vikraman-cinemapettai
vikraman-cinemapettai

ஆபாசம் இல்லாத நல்ல குடும்ப திரைப்படங்களை கொடுத்த இயக்குனர்கள் வரிசையில் விக்கிரமனுக்கு எப்போதுமே நல்ல பெயர் உண்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்