வாத்திக்கு போட்டியாக அழுத்தமான மெசேஜ் சொன்ன பகாசூரன்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மோகன் ஜியின் ருத்ரதாண்டவம், திரௌபதி படங்களைப் போல பகாசூரன் படமும் வித்யாசமான கதைக்களம் தான். இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ராதாரவி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தனுஷின் வாத்தி படமும் இன்று தான் வெளியாகி உள்ளது. ஆனாலும் தனது தம்பிக்கு போட்டியாக அழுத்தமான கதைகளத்துடன் பகாசூரன் படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார். பெண்களை மையமாக வைத்து தான் இந்த கதை நகர்கிறது.

Also Read : 5 வயசுல தான் அண்ணன் தம்பி, அப்புறம் பங்காளி.. ஒரே நாளில் மோதிக் கொள்ளும் தனுஷ், செல்வராகவன்

bakasuran-review

இளம் பெண்கள் மர்மமாக இறப்பதற்கான காரணம் என்ன என்பதை துப்பறியும் படம் தான் பகாசூரன். இப்படம் ஆன்லைன் மூலம் ஒழுக்கக்கேடான செயல்களில் இளம் பெண்கள் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை ஆராய்கிறது. இந்தப் படத்தைப் பற்றிய அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

bakasuran-movie-review

சாணிகாகிதம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இந்த படத்தில் வெறித்தனமான நடிப்பை இறக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமின்றி ஒரு சிறந்த நடிகர் என்பது பகாசூரன் படம் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அதேபோல் செல்வராகவனுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சதுரங்க வேட்டை நட்டி நடராஜ்.

Also Read : ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் செல்வராகவன்.. எல்லாம் அழுவ ரெடியா இருங்க

இவர் பெண்களின் மர்ம கொலையை விசாரணை செய்யும் பாணி அற்புதமாக அமைந்திருந்தது. மேலும் படத்தின் முக்கிய பலம் இசை. சாம் சி எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்களை சிறப்பாக கொடுத்துள்ளார். இதில் அப்பா, மகள் இடையே உள்ள பாடல் பெரிய அளவில் பேசப்படுகிறது.

bakasuran-movie-review

பகாசூரனில் குறை என்னவென்றால் படம் மெதுவாகவும், ஸ்கிரிப்ட் வேகமாகவும் நகர்ந்து இருக்கலாம். மேலும் பல பிற்போக்கான விஷயங்களை மோகன் ஜி படத்தில் கொடுத்துள்ளார். சமூகத்துக்கு நல்ல கருத்துள்ள படமாக பகாசூரன் அமைந்திருந்தாலும் தேவையில்லாத சில விஷயங்களை தவிர்த்திருந்தால் மக்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும்.

bakasuran-movie-review

சினிமாபேட்டை ரேட்டிங் : 3.5/5

Also Read : முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்