டாப் 10 சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட்.. புத்தம் புது சீரியல்களை இறக்கி டஃப் கொடுத்து வரும் விஜய் டிவி

சினிமா துறையை பொருத்தவரையிலும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டுமே ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் அதிகம் செலுத்தி வருகிறது. அதிலும் வெள்ளித்திரையைக் காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஆனது மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். தற்பொழுது ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் ஆனது இணையத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

இதில் 10-வது இடத்தில் விஜய் டிவி சீரியல் ஆன சிறகடிக்க ஆசை, ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 9-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 8-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் இடம் பிடித்துள்ளது. மேலும் மிஸ்டர் மனைவி சீரியலை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலும் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

மிஸ்டர் மனைவி: இந்த சீரியலில் அஞ்சலி மற்றும் விக்கியின் காதலை எப்பொழுது ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர். ஆனால் அஞ்சலியின் பாட்டி மற்றும் நண்பர்கள் எப்படியாவது இவர்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்படி சுவாரசியமான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் மிஸ்டர் மனைவி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: முழு பைத்தியமாக மாறிய ராதிகா.. அம்மு குட்டினு கொஞ்சிட்டு அசிங்கப்பட்ட கோபி

சுந்தரி: இந்த சீரியலில் மாதக்கணக்கில் இழுத்தடித்து வரும் கார்த்திக் உடைய விவகாரம் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் கூடிய விரைவிலேயே அணுவிற்கு எல்லாம் உண்மைகளும் தெரிந்து கார்த்திக்கு பெரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த சீரியலானது நகர்ந்து வருகிறது. மேலும் சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் ஆதிராவின் திருமண விஷயம் ஜவ்வு மிட்டாயாக மாத கலக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குணசேகரனின் தந்திரத்தால் அப்பத்தாவின் கைவசம் இருந்த 40 சதவீத சொத்தானது தற்பொழுது அநியாயமாக பறிபோய் உள்ளது. மேலும் ஆதிராவின் திருமண விஷயத்தை வைத்து இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் எதிர்நீச்சல் சீரியலானது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் குற்றம் செய்தது யாராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும் என்ற நோக்கில் இனியா தனக்கு தாலி கட்டிய கணவன் என்று கூட பார்க்காமல் விக்ரமை சிறைக்கு அனுப்பியுள்ளார். தற்பொழுது இந்த சம்பவமானது நீதிமன்றம் வரையிலும் வந்து மிக சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இனியா சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: 40% சொத்தில் ஆப்பு வைத்த அப்பத்தா.. ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண முடியாமல் தவிக்கும் குணசேகரன்

வானத்தைப்போல: இந்த சீரியலில் வெற்றியின் கொலை வழக்கில் சிறை வரை சென்றுள்ள துளசியை எப்படியாவது வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜபாண்டியும், சின்ராசு பரிதவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் வெற்றி மறைமுகமாக இருந்து போலீசுக்கே தண்ணி காட்டி வருகிறார். இப்படி பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் வானத்தைப்போல  சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் உண்மையான நட்பிற்கு இலக்கணமாக இருக்கும் கயல் மற்றும் எழில் நண்பர்களாக மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் ஒன்று சேர வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்து வரும் கயலின் பெரியப்பாவை எதிர்த்து இவையெல்லாம் எவ்வாறு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் கயல் சீரியல் ஆனது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

Also Read: குழந்தை பெற்ற பின்பும் குறையாத ரொமான்ஸ்.. கடற்கரையில் ஆல்யாவுக்கு லிப் கிஸ் கொடுத்த சஞ்ஜீவ் போட்டோஸ்

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் புத்தம் புது சீரியல் ஆனது அசுர வேகத்தில் முன்னேறி டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அதிலும் சன் டிவிக்கு போட்டியாக புத்தம் புது சீரியல்களை இறக்கி மற்ற சீரியல்களுக்கு எல்லாம் டப் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். மேலும் 6-வது இடத்தை விஜய் மட்டும் சன் டிவி சீரியல்கள் போட்டி போட்டு ஒரே இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.