வசூலில் வேட்டையாடிய 2 தமிழ் படங்கள்.. வயசானாலும் இவங்க தான் நடிப்பு அசுரர்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவை 2 ஜாம்பவான்கள் ஆட்சி செய்து வந்தனர். அந்த வகையில் 60, 70 களில் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் பெரிய வரவேற்பு பெற்றது. அதற்கு அடுத்தபடியாக ரஜினி, கமல் இருவரின் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து விஜய், அஜித் படங்கள் தற்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இதற்கு அடுத்த தலைமுறையாக சிம்பு, தனுஷ் படங்களுக்கும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் ரஜினி, கமல் காலத்தில் சிவாஜி ஹீரோவாக நடிக்காமல் மற்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். எம்ஜிஆர் அரசியலுக்கு சென்றதால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால் தற்போது விஜய், அஜித் படங்கள் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களுக்கு போட்டியாக வசூல் வேட்டையாடி வருகிறார்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். வயதானாலும் அதே எனர்ஜியுடன் மற்ற நடிகர்களின் படத்தின் வசூலை தும்சம் செய்து முதலிடத்தில் உள்ளனர்.

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O படம் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது. தற்போதும் சூப்பர்ஸ்டார் அந்த முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவருடைய வசூலை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.

அதேபோல் நடிப்பு அசுரன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் படம் உலக அளவில் 300 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு போட்டியாக இவர்களது படம் திரையரங்குகளில் சக்கை போடு போடுகிறது.

ரஜினி, கமல் இருவரும் சீனியர் நடிகர்கள் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார்கள். தற்போதுள்ள நடிகர்களுக்கு இவர்களது படம் டஃப் கொடுப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி தற்போது தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் கமல்ஹாசனும் முழுவீச்சில் படங்களில் கவனம் செலுத்தயுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்