பிளாஸ்டிக் சர்ஜரியினால் அழகை மெருகேற்றிய டாப் 10 நடிகைகள்.. மூக்கு, உதடு ஆப்ரேஷனால் உயிரை விட்ட நடிகை

ஒரு படத்தில் நடிகைகளின் பங்களிப்பு என்பது அந்த படத்திற்கான விளம்பரங்களாகவே பார்க்கப்படுகிறது. ஹீரோக்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஹீரோயின்களுக்கு கச்சிதமான அழகு என்பது ரொம்ப முக்கியம். இதனாலேயே நடிகைகள் தங்கள் அழகின் மேல் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பதோடு அதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி வரை செல்கிறார்கள். சிலருக்கு இது தோல்வியில் முடிந்தாலும் பல நடிகைகள் வெற்றி பெற்று முதலிடத்திலும் இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்: ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகின் கனவுக்கன்னியாக இருந்தவர் ஐஸ்வர்யா ராய். லிப் ஃபில்லர்ஸ், ஃபேஷியல் ஃபில்லர்ஸ் மற்றும் மூக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

சுருதி ஹாசன்: நடிகை சுருதி ஹாசன் மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதை அவரே வெளிப்படையாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இவருடைய அறுவை சிகிச்சை மாற்றம், முதல் படமான ஏழாம் அறிவில் நன்றாகவே தெரியும்.

சமந்தா: நடிகை சமந்தாவின் முதல் படத்தில் இருந்த தோற்றம் இப்போது மொத்தமாகவே மாறிவிட்டது. இவர் மூக்கு, கன்னம் மற்றும் லிப் ஃபில்லர்களையும் பயன்படுத்தி இருக்கிறார்.

Also Read: முன்னேற்றம் அடையாத சமந்தாவின் உடல்நிலை.. அடுத்த கட்ட சிகிச்சைக்காக எடுத்த அதிரடி முடிவு

நயன்தாரா: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய உடல் எடையை குறைக்க லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இன்றளவும் தன்னுடைய அழகை மேம்படுத்த ஆயுர்வேத சிகிச்சை செய்து வருகிறார்.

அனுஷ்கா ஷெட்டி: நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அதிக உடல் எடையை கூட்டினார். உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் லிபோ ஃபேட் என்னும் அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஸ்ரீதேவி கபூர்: நடிகை ஸ்ரீதேவி தென்னிந்தியாவில் இருந்து சென்று பாலிவூடில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர். அவர் இதற்காக தன்னுடைய மூக்கு மற்றும் உதடு பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இறுதியாக இவர் செய்த மார்பக அறுவை சிகிச்சை காரணமாக ரொம்ப உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

Also Read: தொடர் கொலை மிரட்டல்.. மனஉளைச்சல், மாரடைப்பு மகளுடன் வெளிநாடு தப்பி சென்ற நயன்தாரா பட முரட்டு வில்லன்

கங்கனா ரனாவத்: ‘தாம் தூம்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இவர் உதடு, மார்பகம், கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அனுஷ்கா ஷர்மா: பாலிவூடில் முதன்மை கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா ஷர்மா. இவர் உதட்டை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பிரியங்கா சோப்ரா: பாலிவூடில் இருந்து ஹாலிவுட் வரை சென்றவர் தான் பிரியங்கா சோப்ரா. இவர் மூக்கு மற்றும் உதடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

காஜல் அகர்வால்: பொம்மலாட்டம், மாவீரன் போன்ற படங்களின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இவர் தன்னுடைய மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றி கொண்டார்.

Also Read: விக்கி-நயன் காதல் திருமணத்திற்கு டஃப் கொடுக்கும் நடிகை.. 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்டமான பார்ட்டி

Next Story

- Advertisement -