லைக்கா, சன் பிக்சர்ஸ் எல்லாம் ஓரம் போங்க.. சூர்யா கைவசம் இருக்கும் 3 பெரும் நிறுவனங்கள்

Suriya : இப்போது தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் அதிக முதலீட்டில் உருவாகும் படங்கள் சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா தான். அதுவும் லைக்கா இப்போது இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. அதேபோல் சன் பிக்சர்ஸ் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் மூலம் பெரிய லாபத்தை பார்த்தது.

அடுத்ததாக லோகேஷ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் உருவாகும் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் சன் பிக்சர்ஸ் மற்றும் லைக்கா நிறுவனங்கள் கொடிகட்டி பறந்து வரும் நிலையில் அவர்களை ஓரம்கட்ட சூர்யா ஒரு கூட்டணி போட்டிருக்கிறார்.

அதாவது இப்போது சிவகுமார் குடும்பம் தான் தமிழ் சினிமாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இப்போது நிறைய தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் சூர்யா தயாரிப்பு நிறுவனத்தில் முழுவதுமாக இறங்கி இருக்கிறார்.

Also Read : இதை விட சூர்யா, கார்த்தியை அசிங்கப்படுத்த முடியாது.. இப்பவாச்சும் பேசுங்கய்யா, ஒரே மீமில் வறுத்தெடுத்த ப்ளூ சட்டை

அதாவது சிவக்குமார் மூலமாக ஞானவேல் ராஜா, எஸ்ஆர் பிரபு இவர்களை சூர்யா மற்றும் கார்த்தி படங்களை தயாரிக்க வைத்து பெரிய தயாரிப்பாளராக மாற்றி விட்டுவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2d என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தை சொந்தமாக வைத்து அதிலும் கல்லா கட்ட தொடங்கி இருந்தனர்.

இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன், ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் 2d என்டர்டைன்மென்ட் மூன்றிலுமே இப்போது சூர்யா தான் முதலீடு செய்து வருகிறாராம். அதோடு மட்டுமல்லாமல் இதில் இப்போது எக்கச்சக்க படங்கள் தயாரித்து வருகிறார்களாம். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தையும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரித்து வருகிறது.

Also Read : திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்பம்.. ஞானவேல் ராஜாவின் நரி தந்திரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்