இதை விட சூர்யா, கார்த்தியை அசிங்கப்படுத்த முடியாது.. இப்பவாச்சும் பேசுங்கய்யா, ஒரே மீமில் வறுத்தெடுத்த ப்ளூ சட்டை

Suriya-Karthi: இப்போது ட்விட்டர் தளத்தில் சூர்யா, கார்த்தி சர்ச்சை தான் மிகப்பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது. கார்த்தி 25 விழாவிற்கு அமீர் வருகை தராதது சிறு சலசலப்பாக மாறியது. அதை தொடர்ந்து அவர் வைத்த கருத்து பிரளயமாக மாறி இப்போது சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.

இந்த விவகாரத்தில் வான்டடாக உள்ளே வந்த ஞானவேல் ராஜா, அமீர் பற்றிய பல அவதூறு விஷயங்களை கூறினார். அதற்கு அமீரும் தன் தரப்பு நியாயங்களை விளக்கினார். இப்படி மாறி மாறி நடந்த இந்த பஞ்சாயத்தில் இப்போது பல பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

Also read: அமீரை கொச்சைப்படுத்திய ஞானவேலுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திய பொன்வண்ணன்.. உச்சகட்ட அவமானம்

அதன்படி சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன் என ஆதரவு கரம் நீண்டு கொண்டே இருக்கிறது. இதிலிருந்தே ஞானவேல் ராஜா ஏதோ பித்தலாட்டம் செய்கிறார் என பலரும் பேசி வருகின்றனர். இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு சூர்யா, கார்த்தியை ஒரே ஒரு மீம் போட்டு பங்கமாக கலாய்த்துள்ளார்.

அதன்படி ரஜினி முருகன் பட பஞ்சாயத்து காட்சியை அவர் இந்த விவகாரத்தோடு கனெக்ட் செய்து இருக்கிறார். அதில் அமீருக்கு ஆதரவு 4, ஞான ஈட்டி ( ஞானவேல்) 0 என கலாய்த்து தள்ளி இருக்கிறார். அதை தொடர்ந்து இப்பவாவது பேசுங்கய்யா என சூர்யா குடும்பத்தை அவர் கதற விட்டுள்ளார்.

Also read: திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்பம்.. ஞானவேல் ராஜாவின் நரி தந்திரம்

ஏற்கனவே இந்த விவகாரத்தில் சூர்யா, கார்த்தி அமைதியாக இருப்பது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. அதை ப்ளூ சட்டையும் இப்போது வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் விரைவில் சிவக்குமார் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் தராவிட்டால் பல பூதங்கள் கிளம்பவும் வாய்ப்பு இருக்கிறது.

blue-sattai-tweet
blue-sattai-tweet