வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தை காட்டும் எதிர்நீச்சல்

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் பிரபல சீரியல்கள் குடும்பங்களின் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்படியாக எந்த சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்று அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அதிலும் அசுர வேகத்தில் முன்னேறி மற்ற சீரியல்களுக்கு எல்லாம் டஃப் கொடுத்து வருகிறது சன் டிவியின் ஃபேவரிட் சீரியல்.

இதில் 10-வது இடத்தில் அன்பே வா சீரியலும், 9-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது.

சுந்தரி: இந்த சீரியலில் கார்த்திக் தனது திருமண விஷயத்தால் அப்பாவையே இழந்துள்ளார். மேலும் குடும்பத்தை விட்டே வெளியேறியுள்ள நிலையில் சுந்தரியின் அம்மா மற்றும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சுந்தரி சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: படத்துல வர காசு சும்மா, சீரியலில் அதிகமா சம்பாதிக்கும் 5 பிரபலங்கள்.. நம்பர் ஒன் இடத்தில் எதிர்நீச்சல் குணசேகரன்

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் மீராவின் வளைகாப்பு நல்லபடியாக முடிந்துள்ள நிலையில் அனைவரும் ஒரே குடும்பமாக  இணைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் குடும்ப எதிரியான மேனகாவின் ஆட்டத்திற்கும் முடிவு கட்டியுள்ளனர். தற்பொழுது சீரியல் ஆனது பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணான கண்ணே சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது.

இனியா: இந்த சீரியலில் விக்ரம் இனியாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என போராடி வருகிறார். அதிலும் இந்த திருமணத்தை நிறுத்த பல்வேறு வகைகளில் தடைகள் வந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் விக்ரம்  எப்படி சமாளித்து இனியாவை கரம் பிடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இனியா சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில்  எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் ஆதிராவின் திருமண விவகாரம் பெரும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. இந்நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ள ஆதிராவியின் திருமணம் யாருடன் நடக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் அசுர வேகத்தில் முன்னேறி 3-வது இடத்தில் உள்ளது.

Also Read: டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்.. 700 எபிசோடோடு ஊத்தி மூடிய சன் டிவி

வானத்தைப்போல: இந்த சீரியலில் எப்படியாவது துளசியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார் வெற்றி. இது ஒரு புறம் இருக்க சின்ராசுவை மறைமுகமாக பொன்னி காதலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பொன்னிக்கு எதிராகவே அமைந்து விடுகிறது. வானத்தைப்போல சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில்  2-வது இடத்தை பிடித்துள்ளது.

கயல்: இந்த சீரியலில் குடும்பத்தில் உள்ள அனைவரும் எப்படியாவது எழிலுடன், கயலை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் மூர்த்தியின் பெரியப்பா இவர்களின் திருமணத்திற்கு  முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். கயல் சீரியல் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில்  முதல் இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சனியனை தூக்கி பனியனில் போட்டு கொண்ட பாண்டியன் குடும்பம்.. சகுனி வேலையை கச்சிதமாக செய்த மீனாவின் அப்பா

இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களில், ஆண் ஆதிக்கத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அசுர வேகத்தில் முன்னேறி மற்ற சீரியல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்து வருகிறது.

- Advertisement -

Trending News