இந்த வாரம் பிக் பாஸில் வெளியேற போகும் கல்லுளிமங்கன்.. உச்சத்தை தொட்ட பாலாஜி

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக சாண்டி மாஸ்டர், தீனா உள்ளிட்ட பிரபலங்களை இறக்கியுள்ளது. இதன் மூலம் இனிவரும் நாட்களில் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாகவும், ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரியும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது. அதன்படி இந்த வாரம் பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, ரம்யா பாண்டியன், அபிராமி, சதீஷ், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருக்கின்றனர்.

இதில் இந்த வாரம் முழுவதும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாலா முதலிடத்தை பிடித்து அதிக ஓட்டுகள் வாங்கியுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஜூலி, சுருதி, ரம்யா பாண்டியன், அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இவர்களில் கடைசி இரண்டு இடங்களை சதீஷ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்கள். அதில் சுரேஷ் சக்ரவர்த்தி போட்டியாளராக ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து பின்னர் முதல் ஆளாக வெளியேறியவர். இன்னும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருப்பதால் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

ஆனால் இந்த முறை அவர் ரசிகர்களின் கவனத்தை பெற தவறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில நாட்களாக அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறாரா என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்த சதீஷ் இந்த வீட்டில் அதிகமாக பேசுவதே கிடையாது என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கிறது.

சொல்லப்போனால் இவரை விட அதிகமாக வாய் பேசும் தாமரை, அபிராமி உள்ளிட்டோர் வீட்டுக்குள் இருப்பதால் இவர் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. இதனால்தான் இவர்கள் இருவருக்கும் தற்போது மிகக் குறைந்த அளவே ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால் தற்போது இவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர்.