இதுக்கு மேல சொல்ல ஒன்னுமே இல்ல.. மொத்தமாய் உளறி கொட்டிய லியோ பிரபலம்

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் லியோ. விஜய் நடிப்பில் பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய இப்படத்தின் சீக்ரெட்டை உளறிக் கொட்டிய பிரபலம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் அரசியல் என பிசியாக இருந்து வரும் விஜய் மேற்கொள்ளும் இப்படத்தில் முக்கிய பிரபலங்களான அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

Also Read: 30 வருடத்திற்கு பிறகு வெளிவரும் இரண்டாம் பாகம்.. சரத்குமார் நிராகரித்து இன்று வரை ஏங்கும் சூப்பர் ஹிட் மூவி

மேலும் இப்படத்தில் ஐந்தாவது முறையாய் த்ரிஷா, விஜய் உடன் இணைந்து நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வழங்கும் இப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ஒருமுறையாவது நடித்தே தீர வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி வந்தார் அனுராக் காஷ்யப்.

அவரின் வேண்டுகோளுக்கு இணங்க லோகேஷ் கனகராஜ் இவருக்கு லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இவர் இடம் பெறும் காட்சிகளை குறித்து தற்பொழுது உளறிக் கொட்டி வருகிறார் மன்சூர் அலிகான்.

Also Read: ஜெயிலர் சூட்டுடன் ஆரம்பிக்கப் போகும் தலைவர்-170.. கேட்ட சம்பளத்தை அப்படியே கொடுத்த லைக்கா

நியூஸ் பேப்பரில், லோகேஷ் கனகராஜ் படத்தில் இறக்கும் காட்சியிலாவது நடித்து தீர வேண்டும் என அனுராக் காஷ்யப் கூறியதை பார்த்த மன்சூர் அலிகான், தற்பொழுது இவர் படத்தில் இரண்டு கண் சூட்டில் இடம்பெறுகிறார் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்.

கதைக்கு திருப்புமுகனையாக அமைந்த காட்சிகளை ரிவில் செய்தது மட்டுமல்லாது தற்பொழுது லியோ குறித்து எனக்கு இந்த தகவலும் தெரியாது என இவர் மழுப்பும் சம்பவம் காமெடியாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. மேலும் இவரை, அதான் எல்லாத்தையும் சொல்லிட்டியே இனி சொல்ல என்ன இருக்கு எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Also Read: டிஆர்பி-ஐ எகிற வைக்க சுதந்திர தினத்திற்கு போட்டி போடும் 5 சேனல்கள்.. மொத்த படங்களின் லிஸ்ட் இதோ

- Advertisement -spot_img

Trending News