டிஆர்பி-ஐ எகிற வைக்க சுதந்திர தினத்திற்கு போட்டி போடும் 5 சேனல்கள்.. மொத்த படங்களின் லிஸ்ட் இதோ

Independence day Movies: விடுமுறை தினங்களில் திரையரங்குகளை விட தொலைக்காட்சிகள் மூலம் டிவி சேனல்கள் அவர்களுடைய டி ஆர் பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்கிறார்கள். அதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது படங்களையும், மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய படங்களையும் தேர்வு செய்து ஒளிபரப்பு செய்வார்கள். அந்த வகையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 தொலைக்காட்சிகளில் என்னென்ன படங்கள் வருகிறது என்பதை பார்க்கலாம்.

ஜீ தமிழ்:ஏப்ரல் மாதம் வெளியான புத்தம் புது திரைப்படமான கோஸ்டி என்ற படம் நாளை காலை 10.30 மணிக்கு போட போகிறார்கள். இதில் காஜல் அகர்வால், கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு இவர்கள் நடிப்பில் திகில் மற்றும் நகைச்சுவை படமாக வெளிவந்தது. அடுத்ததாக மதியம் 1.30 மணிக்கு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகஸ்ட் 16, 1947 என்கிற படம் ஒளிபரப்பாகிறது.

Also read: இறப்பிற்குப் பின் நிறைவேறிய ஆசை.. சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலரில் நடித்துள்ள ஜீ தமிழ் பிரபலம்

விஜய் டிவி: கோவை சரளா நடிப்பில் வெளியான செம்பி திரைப்படம் நாளை 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்கிறார்கள். இப்படம் அனைவரும் மனதையும் கவர்ந்து கோவை சரளாவின் பிரம்மாண்டமான நடிப்பை வெளிப்படுத்தி வந்திருக்கும். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும், காமெடிகளும் இருக்கிறது.

ஜெயா டிவி: இந்த சேனலை பொறுத்தவரை எப்பொழுதும் போட்ட படங்களை வைத்து போட்டு வருவார்கள். அந்த வகையில் காலை 8.30 மணிக்கு பசங்க 2, மதியம் 1.30 போக்கிரி ராஜா மற்றும் மாலை 6 மணிக்கு லிங்கா திரைப்படமும் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

Also read: முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்

கலைஞர் டிவி: விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் மதியம் 1.30 மணிக்கு போடப் போகிறார்கள். இப்படம் என்ன தான் விஜய்யின் படமாக இருந்தாலும் ஏற்கனவே மக்கள் பார்த்து வந்ததால் இதில் அதிக கவனம் செலுத்துவதற்கு வாய்ப்பில்லை. எப்படியாவது டிஆர்பி ரேட்டிங் தொட்டுவிடலாம் என்று பார்க்கிறார்கள் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

சன் டிவி: எல்லா விதத்திலும் முதலிடத்தை பிடித்து இருக்கும் சன் டிவி நாளை சுதந்திர தினத்தை அன்றும் இவர்கள் போடப்படும் படத்தின் மூலமாக முந்திவிட்டார்கள். காலை 11 மணிக்கு காசேதான் கடவுளடா படமும், 2.30 மணிக்கு உத்தமபுத்திரன் மற்றும் சமீபத்தில் வெளியாகி பிரமாண்டமான வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் 2 ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள்.

Also read: மொத்த ஸ்டேஜையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த சூப்பர் ஸ்டார்.. ஜெயிலரால் எகிறிய சன் டிவியின் டிஆர்பி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்