Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை பிரச்சனை தீராத நிலையில் சூப்பர் ஹிட் படம்.. அரவிந்த்சாமி தான் காரணமா

aravind-swamy-cinemapettai

பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அரவிந்த்சாமி சமீபகாலமாக வில்லன் அவதாரம் எடுத்து மிரட்டி வருகிறார். அதிலும் தனி ஒருவன் படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது அரவிந்த்சாமி பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத் இயக்கத்தில் முதல் முறையாக வெளியான படம் சதுரங்க வேட்டை. இப்படத்தில் கேமராமேன் நட்ராஜ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களால் கவரப்பட்டது.

உழைத்து சம்பாதிப்பதை விட கொஞ்சம் உட்கார்ந்து சம்பாதிக்கலாம் என்று நினைக்கும் ஒரு இளைஞனின் கதையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை வினோத் எழுத, நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.

மேலும் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தையும் மனோபாலா தான் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் அரவிந்த்சாமி, திரிஷா, பிரகாஷ்ராஜ், ராதாரவி, யோகி பாபு என பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டே தொடங்கபட்டிருந்தது.

ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகும் இன்னும் சதுரங்கவேட்டை 2 படம் ரிலீசாகாமல் உள்ளது. இதற்கு காரணம் அரவிந்த்சாமி தான் என கூறப்படுகிறது. அதாவது இப்படத்தின் டப்பிங் பேச வருவதற்கு அரவிந்த்சாமி மறுக்கிறாராம். ஏனென்றால் மனோபாலா அரவிந்த் சாமிக்கு சம்பளம் வாங்கி வைத்துள்ளாராம்.

ஆனால் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில்தான் அரவிந்த்சாமி இவ்வாறு செய்கிறார் என மனோபாலா குற்றம்சாட்டியுள்ளார். இதனால் தான் இப்படம் ரிலீஸ் ஆகாமல் இழுபறியாக இருப்பதாக தெரிகிறது. மேலும் இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top