தொடரி படத்தின் தோல்விக்கான காரணம் இதானாம்! அடித்து சொல்லிய இயக்குனர் பிரபுசாலமன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தார்.

இதனைத் தொடர்ந்து கொக்கி, லீ, லாடம் என பல படங்களை பண்ணியிருக்கிறார். இருப்பினும் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்ததோடு, பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. அதுபோல் ‘கும்கி’ திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த நிலையில் பிரபு சாலமன் தனது இயக்கத்தில் வெளியான ‘தொடரி’ படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான படம் தொடரி. இந்தப் படம் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்த்திருந்த பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது.

இப்படி இருக்க தொடரி படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான் என்று பிரபுசாலமன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பிரபு சாலமன் தொடரி பட தோல்விக்கு தான் தான் முழுக்க முழுக்க காரணம் என்று தெரிவித்ததோடு, அந்தப்படம் ஒரு முயற்சி பிழை (ட்ரையல் அண்ட் எரர்) படம் என்றும் கூறியிருக்கிறார்.

Thodari
Thodari

அதுமட்டுமில்லாமல், ஒரு ஸ்டூடியோ உள்ளேயே ட்ரெயினை வைத்து இந்த படத்தை எடுத்தாராம் பிரபுசாலமன். அதேபோல் இதுபோன்ற ஹாலிவுட் ரேஞ் படத்தை எடுப்பதற்கு சரியான vfx டீமும், RNDயும் தேவை என்றும், அவற்றை தொடரி படத்தில் பயன்படுத்தாதது தான் இந்த படத்தின் சறுக்கலுக்கு மிக முக்கிய காரணம் என்றும் பிரபுசாலமன் குறிப்பிட்டிருக்கிறார்.

prabu solomon
prabu solomon

மேலும் தொடரி படத்தில் நிதானம் இல்லாமல் ஹரி பரியாக அனைத்து வேலைகளையும் செய்ததால்தான் இந்தப் படம் தோல்வியில் முடிந்தது என்று பிரபுசாலமன் மனம் உடைத்து பேட்டியில் தெரிவித்திருக்கிறார். எனவே, பிரபுசாலமன் தொடரி படத்தைப்பற்றி குறிப்பிட்டுள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்