பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. மணிரத்னத்தை கடுப்பேற்றிய பிரபலம்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட காவிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தை மணிரத்னம் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் கல்கியின் வரலாற்று நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற ஒரு சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் மியூசிக் சம்பந்தப்பட்ட வேலைகள் இழுபறியில் இருக்கிறதாம்.

அதனால் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் பகுதியை விரைந்து முடித்து கொடுக்க தயாரிப்பாளரிடமிருந்து அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருவழியாக பட வேலைகளை ஆரம்பித்த இசைப்புயல் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

பல படங்களுக்கு இசையமைத்து அனைவரையும் மிரட்டிய ஏ ஆர் ரகுமான் இந்த படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு எப்படி இசை அமைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். அதனால் அவர் இயக்குனரிடம் சில காட்சிகள் சரியாக இல்லை எனவே ரீ ஷூட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அவரே தன்னுடைய படத்தை பற்றி இப்படி சொல்லிவிட்டாரே என்று மணிரத்னம் தற்போது பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். மேலும் அந்த காட்சிகளை மீண்டும் எடுப்பதில் பல சிரமங்கள் இருப்பதால் என்ன செய்வது என்ற யோசனையிலும் அவர் இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமான் இப்படி கூறியதை பார்த்த லைகா புரொடக்ஷன்ஸ் ஏற்கனவே பட்ஜெட் கை மீறிச் சென்றுள்ளது. இதில் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பித்தால் எங்கு செல்வது என்று பயத்தில் புலம்பி வருகிறார்களாம். இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.