செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஆதிராவால் குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்.. எதிர் நீச்சலில் டெரர் பிரதர்சுக்கு விழும் அடுத்தடுத்த அடி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது பல்வேறு சுவாரசியங்களுடன் அடுத்தடுத்து ஏற்படக்கூடிய சம்பவங்களுக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைவருடைய ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றாக உள்ள எதிர்நீச்சல் ரசிகர்களின் பேர்ஆதரவுடன் டிஆர்பி-யில் முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது குணசேகரன் குடும்பத்தில் பெரும் பூகம்பம் வெடித்துள்ள நிலையில் பண்டிகைக்காக கிராமத்திற்கு சென்றுள்ள இடத்திலும்  ஒரு பெரும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

குணசேகரன் மற்றும் எஸ் கே ஆர் இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக பகை இருந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் அதன் முடிவில் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. குணசேகரனின் தம்பிகள் பெரும் பூகம்பத்தையே கிளப்பியதற்கு மாறாக எஸ் கே ஆரின் தம்பி என்றால் இப்படித்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக அருண் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று  மனிதாபிமான அடிப்படையில் தான் உதவி செய்தேன் அனைவரிடத்திலும் பொட்டில் அடித்தார் போல் சொல்லி விட்டார்.

Also Read: ஒரே கதையை வைத்து 2 சீரியல்களை உருட்டும் விஜய் டிவி.. இதுக்கெல்லாம் டிஆர்பி ரேட்டிங் ஒரு கேடு

ஆனால் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் எஸ் கே ஆர் தான்  மூலமாக குடும்பத்தில் ஏதோ செய்யப் போகிறார் என்றும் சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதிரா விஷயத்தில் உண்மை என்னவென்று தெரியாமல் இவர்களாகவே ஒரு முடிவினை எடுத்து விடுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க குடும்பத்தில் பட்டம்மாள் அப்பத்தா கூட்டணி குணசேகரன் கூட்டணி என இரு அணிகளாக இருந்து குடும்பத்திற்குள்ளே ஒரு போர்க்களம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அப்பத்தாவிடமிருந்து 40% எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற நோக்கில் அவரின் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் சென்று கொண்டிருக்கிறார். இந்த ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள மருமகள்கள் அனைவரையும் தனது கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார். 

Also Read: பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்.. டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்

தற்பொழுது குடும்பத்திற்குள்ளே சிறை பறவைகளாக இருந்த இவர்கள் சுதந்திர பறவைகளாக  சிறகடித்து பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் சந்தோஷங்களுக்கும் சிரிப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் அப்பத்தா உடன் கிராமத்திற்கு சென்றுள்ளனர். சென்ற இடத்தில் இவர்கள் அடிக்கும் லூட்டியானது அனைவரையும் ரசிக்கக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. அதிலும்  நந்தினியின் நடிப்பானது அல்டிமேட் ஆக இருக்கும்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்திற்குள்ளே இரண்டு அணிகளாக இருந்துள்ள நிலையில் இரண்டு அணிகளுமே தற்பொழுது வெவ்வேறு விதமான பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர். அதிலும் பண்டிகைக்காக கிராமத்திற்கு சென்ற இடத்தில் நந்தினியின் மகளான தாராவை காணவில்லை என்ற சிக்கலில் மாட்டியுள்ளனர். அந்தப் பிரச்சனையில் இருந்து எவ்வாறு அவர்கள் மீள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read: ஓவர் ஆட்டம் போட்ட ஆலியா மானசா.. விஜய் டிவி விட்ட சாபத்தால் ஏற்பட்ட பரிதாப நிலை

- Advertisement -

Trending News