செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

நடுத்தெருவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. நல்ல பாம்பாக இருந்தாலும் விஷத்தை தான் கக்கும்

விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இதில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீட்டை ஜனார்த்தனன் தனது மகள் மீனாவின் பெயரில் வாங்கி உள்ளார்.

இந்நிலையில் விளையாட்டுப் போட்டியில் ஜெயித்து 10 லட்சத்துடன் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மீண்டும் வந்துள்ளார். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்பதற்காக கண்ணன் மீனாவின் அப்பாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார்.

Also Read : அப்பாவுக்கு மகள் தப்பாம பிறந்திருக்கு.. திருட்டுத்தனத்தில் கோபியை உரித்து வைத்திருக்கும் இனியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு வந்த ஜனார்த்தனன் மிகப்பெரிய பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி வீட்டை விட்டு வெளியே போகுமாறு ஜனார்த்தனிடம் கூறுகிறார். இதனால் ஆவேச அகப்பட்ட ஜனார்த்தனன் இது என்னுடைய வீடு எல்லோரும் வெளியே போங்கள் என கூறுகிறார்.

இதைக் கேட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போகிறது. மேலும் மீனாவும் தனது அப்பாவை எதிர்த்த இந்த வீடு எனது பெயரில் இருக்கிறது என வாதாடுகிறார். இது நான் சம்பாதித்த வாங்கிய வீடு என ஜனார்த்தனன் சொன்னதால் யாராலும் எதுவும் பேச முடியாமல் போய் உள்ளது.

Also Read : பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி கதறவிட்ட ஆண்டவர்.. பறிக்கப்பட்ட வெற்றி, தரமான சம்பவம்

மேலும் மூர்த்தி இன்னும் இரண்டு நிமிடத்தில் இந்த வீட்டை காலி செய்வதாக கூறுகிறார். வேறு வழி இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நடுத்தெருக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரையும் கதிர் தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

நல்ல பாம்பாக இருந்தாலும் விஷத்தை தான் கக்கும் என்பது போல ஜனார்த்தன் நம்ப வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இப்போது கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு நிழலாக உள்ளார். இதைதொடர்ந்து பல திருப்பங்கள் இத்தொடரில் வரவுள்ளது.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

- Advertisement -

Trending News